கடந்த மூன்று வருடத்தில் விற்பனையில் சாதனை படைத்த டியோ ஸ்கூட்டர் !
ஹோண்டா இந்தியா டியோ ஸ்கூட்டர் விற்பனையில் புதிய சாதனை செய்து உள்ளது. 2002-ம் ஆண்டு டியோ ஸ்கூட்டர் அறிமுகமானது . மேலும் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் சிறந்த இரு சக்கர வாகனமாக உள்ள நிலையில் டியோ ஸ்கூட்டர் விற்பனை பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளது .
டியோ ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கையில் கடந்த 3 வருடங்களில் மட்டும் 15 லட்சத்தை எட்டியுள்ளது.
டியோ ஸ்கூட்டரின் சிறப்பு அம்சங்கள்:
டியோ ஸ்கூட்டரில் சிவிடி கியர்பாக்ஸ் மற்றும் 109.2cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. மேலும் அதிகபட்சமாக 8 bhp திறன் , 8.9 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. மேலும் எல்இடி ஹைட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. டியோ ஸ்கூட்டர் ஒன்பது விதமான நிறங்களை பெற்றுள்ளது.
கடந்த 2002-ஆண்டு அறிமுகமான டியோ ஸ்கூட்டர் 14 வருடங்களில் வெறும் 15 லட்சம் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை ஆகியது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 15 லட்சம் ஸ்கூட்டர் விற்பனை ஆகியுள்ளது.
இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் ஸ்கூட்டரில் இதும் ஒன்றாகும்.மேலும் இந்தியா உட்பட ஏற்றுமதி சந்தையில் 44 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது . டியோ ஸ்கூட்டர் கொலம்பியா, நேபால், மெக்சிக்கோ, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.