சுங்க கட்டண வசூலில் மாற்றம்..!லாபமா ? நஷ்டமா.?
பயண தூரத்தை கணக்கிட்டு அதற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய முறை விரைவில் சோதனை அடிப்படையில் அமலுக்கு வர இருக்கிறது.
நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலீடு மற்றும் தூரத்தின் அடிப்படையில் இந்த சுங்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பயணிக்கும் தூரத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்குரிய சுங்கக் கட்டணத்தை செலுத்தும் முறையை டெல்லி- மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பயணிக்கும் தூரத்தை மட்டும் கணக்கிட்டு, அதற்குரிய சுங்கக் கட்டணத்தை செலுத்தும் முறையை டெல்லி- மும்பை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி- மும்பை இடையே இயக்கப்படும் சில டிரக்குகளில் இந்த கட்டண முறைக்கான சாதனங்கள் நிறுவப்பட்டு சோதனைகள் நடக்கின்றன. மேலும், இந்த டிரக்குகளுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக கணக்கில் இருந்து கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவேளை, கணக்கில் இருந்து ஆன்லைன் முறையில் பணம் எடுக்கப்படாவிட்டடால், டோல்கேட் பணியாளர்களுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படும். அந்த டோல்கேட்டில் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.