அடுத்த ஆண்டு முதல் கார்கள் விலை உயருகிறது!

Default Image

இந்தியாவின் 3வது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், உயர்ந்து வரும் உள்ளீட்டு செலவுகளின் காரணமாக தனது ஒட்டுமொத்த வாகன மாடல்களின் விலையில் 3% உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி பயணியர் வாகனங்களில் முன்னணியில் இருக்கும் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 முதல் கமெர்சியல் வாகனங்களான பிக்-அப் டிரக்குகள், பஸ்கள், லாரிகள், டிராக்டர்கள் வரையில் அந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் வரும் ஜனவரி முதல் 3% வரை விலை உயர உள்ளது.
இந்த விலை உயர்வு ஜனவரி 01, 2018 முதல் அமலுக்கு வர உள்ளது.

மகிந்திராவை தவிர்த்து ஸ்கோடா, ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், டாடா மோட்டார்ஸ், இஸுசு மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்களும் ஏற்கெனெவே விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல நிறுவனங்களும் விரைவில் விலை உயர்வை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கார் வாங்க விரும்புவோர் இந்த டிசம்பர் இறுதிக்குள் வாங்குவது லாபகரமாக இருக்கும் என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்