5 லட்சத்திற்குள் கார் வாங்க போறீங்களா.? இந்த 3 கார்களை மிஸ் பண்ணிடாதீங்க..

பட்ஜெட் கார்கள்: 5 லட்ச ரூபாய்க்கு குறைவான விலை கொண்ட கார் மாடல்கள் மற்றும் அதன் விவரங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
நடுத்தர வர்க்கத்து மக்களும் தங்கள் நிதிச்சுமைக்கு ஏற்றவாறு பட்ஜெட் ரக கார்களை வாங்க முன்பு நிறைய விருப்ப தேர்வுகள் இருந்தன. ஆனால் தற்போதைய ஆட்டோமொபைல் சந்தையில் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு, வரி விகிதங்கள், மக்களின் கவனம் பட்ஜெட் கார்களை தவிர்த்து சொகுசு கார்கள் மீது திரும்பியது என பல்வேறு காரணிகளால் தற்போது ஒரு கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் பட்ஜெட் கார் எண்ணிக்கை உள்ளது. அதில் மக்கள் மத்தியில் பிரபலமான கார் மாடல்கள் சிலவற்றை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
மாருதி சுஸுகி ஆல்டோ K10 (Maruti Suzuki Alto K10) :
நாட்டிலேயே அதிக விற்பனையான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது மாருதி சுசுகி ஆல்டோ. இதன் முந்தைய பட்ஜெட் ரக கார் மாடலான ஆல்டோ 800 நிறுத்தப்பட்ட காரணத்தால் தற்போதைய சந்தையில் மீதம் இருப்பது ஆல்டோ கே10 மட்டுமே. பட்ஜெட் ரக ஆல்டோ கே10 மாடல் விலை 4 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது.
இந்த மாடல் பெட்ரோல் எஞ்சினை கொண்டுள்ளது. 67 PS என்ற அளவில் ஆற்றலையும், 89 Nm என்ற திறனையையும் கொண்டுள்ளது. இந்த மாடலில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கோனுள்ளது. இதில் மேலும் வசதிகள் தேவையெனில் அதற்கேற்ற விலையேற்றம் இருக்கும்.

மாருதி சுஸுகி S-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) :
4.26 லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து தொடங்குகிறது மாருதி சுசுகி S-பிராஸ்ஸோ. மேற்கண்ட மாருதி சுசுகி ஆல்டோ கே10 ரக எஞ்சினை கொண்டுள்ள இந்த மாடலானது மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) வசதி அடிப்படையில் அதன் விலையில் இருந்து 5 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) வரையில் விலையில் மாற்றம் இருக்கும். மற்ற வசதிகள் மாருதி சுசுகி ஆல்டோ கே10வில் குறிப்பிடப்பட்டுள்ளது இருக்கும்.

ரெனால்ட் க்விட் (Renault Kwid) :
ரொனால்ட் க்விட் 4.69 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ஆரம்பமாகிறது. 1.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்த வாகனம் கொண்டுள்ளது. இது 68 PS அளவில் அதிகபட்ச ஆற்றலையும், 91 Nm திறனையும் கொண்டுள்ளது. 5-ஸ்பீடு MT வசதி கொண்டுள்ள வாகனங்கள் 5 லட்ச ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து துவங்குகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!
February 27, 2025
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025