புதிய பிஎம்டபிள்யூ ஷேடோ எடிசன் 320டீ வேரியண்ட்டிலும், 330ஐ எம் ஸ்போர்ட் மாடலிலும் கிடைக்கிறது. வசீகரத்தை கூட்டும் அம்சங்களுடன் மிகவும் கவர்ச்சியான புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் மாடல் வந்திருக்கிறது. மேலும், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹெட்லைட்டில் புகை சூழ்ந்தது போன்ற கரும் பூச்சு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புற கிட்னி க்ரில் அமைப்பில் பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு இருக்கிறது. இந்த காரில் விசேஷமான டிசைன் கொண்ட 18 அங்குல அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஷேடோ எடிசன் காரில் இரட்டை வண்ண அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 8.7 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெர்று இருக்கிறது. 10.5 அங்குல திரையுடன் கூடிய இன்ஸட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார் மற்றும் 250வாட் ஆடியோ சிஸ்டம், 330ஐ மாடலில் வேரியபிள் ஸ்போர்ட் ஸ்டியரிங் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
சாதாரண மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் இந்த காரில் தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் மாடலில் 2.0 லிட்டர்் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 320டீ ஸ்போர்ட் டீசல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடலில் 8 ஸ்பீடு ஆட்டோமேமட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ 330ஐ மாடல் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5.8 வினாடிகளில் எட்டிவிடும். 320டீ மாடலானது 7.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஷேடோ எடிசன் காரின் பெட்ரோல் மாடல் ரூ.47.30 லட்சம் விலையிலும், 320டீ டீசல் மாடல் ரூ.41.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…