ஆட்டோமொபைல்

குறைந்த விலையில் களமிறங்கும் BMW எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.! வெளியான அசத்தல் அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் CE 02 மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ (BMW) ஆனது கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு புகழ்பெற்ற நிறுவனமாகும். இது ஆடம்பர வாகனங்களுக்கு பெயர் பெற்றது மற்றும் வாகனத் துறையில் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

BMW CE 02 [Image source : Twitter/@DoluBatarya]

தற்பொழுது, வளர்ந்து வரும் மின்சார வாகன உலகில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பிஎம்டபிள்யூ நிறுவனம், புதிதாக BMW CE 02 என அழைக்கப்படும் ஒரு இலகுரக (Lightweight) மின்சார மோட்டார் சைக்கிளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

BMW CE 02 [Image source : Twitter/@dosukohi_RSS]

இதுகுறித்து கூறிய பிஎம்டபிள்யூ நிறுவனம், மின்சாரத்தினால் இயங்கக்கூடிய BMW CE 02, இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இ-ஸ்கூட்டரோ அல்லது இ-மோட்டார் சைக்கிளோ அல்ல. இது நகர்ப்புற பகுதிகளில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு மின்சார வாகனம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.

BMW CE 02 பேட்டரி திறன்:

இது ஓட்டுனர்களின் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு செயல்திறன் வகைகளில் வருகிறது. ஸ்டாண்டர்டு மாடல் 11 kW (15 bhp) மின் உற்பத்தி கொண்ட மோட்டார் உள்ளது. இதில் 3.9 kWh பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்ய, நிறுவனம் 1.5 kW சார்ஜரை வழங்கியுள்ளது. இது 95 kmph வேகம் வரை செல்லக்கூடும்.

BMW CE 02 [Image source : Twitter/@Seapeekay]

மேலும், இதில் மற்றொரு மாடல் 4 kW (5 hp) மின் உற்பத்தி கொண்ட மோட்டார் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய, நிறுவனம் 0.9 kW சார்ஜரை வழங்கியுள்ளது. இது 45 kmph வேகம் வரை செல்லக்கூடும்.

BMW CE 02 விலை:

இந்த மின்சார வாகனத்தின் விலையானது பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுவரை வெளியிட வாகனத்தை விட, குறைந்த விலை மின்சார இரு சக்கர வாகனமாக உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ரூ.7 லட்சம் ($8474 MSRP) ஆகவும், மற்றொரு மாடல் ரூ.6.2 லட்சமாகவும் ($7599 MSRP) உள்ளது.

BMW CE 02 [Image source : Twitter/@DoluBatarya]

BMW CE 02 அம்சம்:

இது 3.5-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் உங்கள் பயணம் குறித்த தகவல்கள், பேட்டரி சார்ஜ் ஆகும் தகவல்களை காணலாம். மேலும், உங்கள் போனை சார்ஜ் செய்ய USB-C சார்ஜிங் போர்ட் உள்ளது. இந்த BMW CE 02 மின்சார இரு சக்கர வாகனமானது 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

9 minutes ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

1 hour ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

2 hours ago

இபிஎஸ் தலைமையில் மா.செ கூட்டம்.! முதல் வரிசையில் செங்கோட்டையன்!

சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…

3 hours ago

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

4 hours ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

4 hours ago