டீசலில் இயங்கும் வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய இந்திய அரசாங்கத்திற்கு எண்ணெய் அமைச்சகக் குழு பரிந்துரை.
இந்தியாவில் மாசுபட்ட நகரங்களில் மாசு உமிழ்வைக் குறைக்க, டீசலில் இயங்கும் நான்கு சக்கர வாகனங்களை 2027ஆம் ஆண்டுக்குள் தடை செய்ய அரசுக்கு எண்ணெய் அமைச்சகக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, டீசல் வாகனங்களைத் தடைசெய்து மின்சார மற்றும் எரிவாயு எரிபொருள் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
2030க்குள், மின்சாரம் இல்லாத நகரப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படக்கூடாது, 2024 முதல் நகரப் போக்குவரத்திற்கான டீசல் பேருந்துகள் இயக்கப்படக்கூடாது என்று எண்ணெய் அமைச்சகத்தின் குழு அறிக்கையில் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பெருக்குவதற்காக, மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களின் விரைவான மாற்றத்திற்கு FAME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊக்கத்தொகைகளை, மார்ச் 31 க்கு அப்பாலும் நீடிக்க அரசிற்கு குழு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார மற்றும் கலப்பின(எரிபொருள் மற்றும் கேஸ்) வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2015இல் தேசிய எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷனின் கீழ் நிதி உதவியை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது. இந்தியாவில் போக்குவரத்துத் துறைகளில் டீசல் இன்னும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
2024 முதல் சரக்கு போக்குவரத்திற்காக ரயில்வே மற்றும் எரிவாயு(கேஸ்) மூலம் இயங்கும் லாரிகளை அதிக அளவில் பயன்படுத்த குழு பரிந்துரைத்தது. இந்தியாவில் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் மின்சாரத்தால் இயக்கப்பட வேண்டும், எரிவாயுவை 10-15 ஆண்டுகளுக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்றும் அந்த குழு கூறியது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…