பசங்களுக்கு பிடித்த பஜாஜ் பல்சர்…!!!! கம்பீரத்தின் கதாநாயகனை பற்றிய சிறப்பு தொகுப்பு…!!!!
இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என்று நினைத்தவுடன் இளைஞர்கள் கண் முன் முதலில் நிழலாடுவது பல்சர் வண்டி தான்.மிரட்டும் முகப்புடன், யானை போன்ற கம்பீரத்துடன் சாலைகளில் இறக்கை கட்டி பறக்கும் பல்சரை கண்டவுடன், நாம் வைத்திருக்கும் பழைய பைக்கை உடனே மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பு.பீரத்துடன் சாலைகளில் அனாயசமாக பறக்கும் பல்சரை வாங்க வேண்டும் என்பது இளைஞர்களின் கனவு.
இந்தியாவில் 150சிசி ரக பைக்குகளுக்கு மரியாதையையும், மார்க்கெட்டையும் ஏற்படுத்தி கொடுத்த பைக் என்றால் அது பல்சர் என்று கூறினால் அது மிகையாகாது. வாகன சந்தையில் புற்றீசல் போல 150சிசி ரக பைக்குகள் பல அறிமுகமான போதும், தனது இடத்தை சிறிதும் விட்டு தராமல் மார்க்கெட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பஜாஜ் பல்சர்150டிடிஎஸ்ஐ பைக் பற்றிய தகவல்கள்.
15.1 bhp திறன் கொண்ட 149.1சிசி ஏர்கூல்டு எஞ்சீனும்,5ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன்,அதிகபட்சமாக இதன் திறன் 14.09 PS 8500rpm,இதன் அதிகபட்ச டார்க், 15.22 nm 6500rpmடிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்,முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் 130mm Stroke,பின்பக்க சஸ்பென்ஷன் 5ஸ்டெப் அட்ஜஸ்டபிள் கேனிஸ்டர்,முன்பக்க பிரேக் 240மிமீ டிஸ்க் பிரேக்,பின்பக்க பிரேக் 130மிமீ டிரம் பிரேக்,முன்சக்கர டயர் அளவு 90/90 x 17,பின்சக்கர டயர் அளவு 100/90 x 17,வீல் பேஸ் 1320மிமீ,இந்த வண்டியின் எடை 143கிலோ,பேட்டரி 12V Full DC,2லிட்டர் ரிசர்வுடன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்,
இந்த வண்டியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115கி.மீ,மைலேஜ் லிட்டருக்கு 55கி.மீ,இந்த வண்டி சென்னை ஆன்ரோடில் விலை ரூ.64,114 ஆகும்.இந்த வண்டி கருப்பு,சிவப்பு,நீலம் மற்றும் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது.இந்த வண்டியின் கம்பீர தோற்றம் இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.
DINASUVADU.