தீபாவளி பரிசாக புத்தம் புது பைக்கை களமிறக்கும் பஜாஜ்.! இனி மைலேஜ் பற்றி கவலையேயில்லை..!
Bajaj Bruser – பெட்ரோல், டீசல் வாகனங்களில் உற்பத்தியை போல, அதன் எதிர்கால தட்டுப்பாடை கருத்தில் கொண்டு தயார் செய்யப்படும் மாற்று எரிசக்தி வாகனங்களில் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்து வந்தாலும் , சில நிறுவனங்கள் சிஎன்ஜி எஞ்சின் பக்கமும் திரும்பி இருக்கின்றன.
Read More – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!
எலக்ட்ரிக் பயன்பாடு அல்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக முன்னதாகவே களமிறங்கியது தான் சிஎன்ஜி (CNG – Compressed Natural Gas) எரிவாயு. இதனை கொண்டு முன்னதாக மூன்று சக்கர ஆட்டோ, சிறிய ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தற்போது அந்த சிஎன்ஜி எரிசக்தியை இருசக்கர வாகன உற்பத்தியிலும் களமிறக்கியுள்ளது பஜாஜ்.
உலகிலேயே சிஎன்ஜி எரிசக்தியை பயன்படுத்தி இருசக்கர வாகன உற்பத்தியை தொடங்கியுள்ள நிறுவனம் பஜாஜ் தான். தற்போதும் கிராமப்புறங்களில் பஜாஜ் பிளாட்டினா , பாஜாஜ் CT100க்கு உண்டான மரியாதை இன்னும் குறைந்தபாடில்லை. அந்தளவுக்கு மைலேஜ் கிங் என வளம் வருகிறது.. ஆனால் அதே போல ஒரு மைலேஜ் கிங் பைக்காக பஜாஜ் நிறுவனம் தற்போது வரையில் வேறு வாகனத்தை அந்தளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடிக்கவைக்க முடியவில்லை
Read More – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!
பஜாஜ் பல்சர் இன்னும் மார்க்கெட்டில் கிங்காக இருந்தாலும், அதனை நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் மைலேஜ் வாகன பிரியர்கள் கொண்டாடும் வாகனமாக இல்லை. அதனை ஈடுகட்டவே இந்த சிஎன்ஜி எஞ்சின் இருசக்கர வாகனத்தை பஜாஜ் களமிறக்க உள்ளது. இதனை பஜாஜ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அண்மையில் உறுதிப்படுத்தினார்.
பஜாஜ் புரூஸர் 125சிசி என புதிய மாடலில் இருந்து ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பஜாஜ் நிறுவனம் கிராமப்புறத்தில் தான் விட்ட மைலேஜ் கிங் இடத்தை மீண்டும் பிடிக்கவே இந்த வாகனத்தை பஜாஜ் நிறுவனம் களமிறக்க உள்ளது தெரியவந்தது. 100 – 160 சிசி வரையில் புதிய சிஎன்ஜி ரக இன்ஜின் வாகனங்கள் இந்த வருட அடுத்த காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை, மற்றும் ஒரு லிட்டருக்கு தரும் மைலேஜ் ஆகிவற்றை விட சிஎன்ஜி எஞ்சினில் ஒரு கிலோ கியாஸ் விலை, அதன் மூலம் தரும் மைலேஜே ஆகியவை சிறப்பானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது .
Read More – அதிரடியான டிஸ்கவுண்டுகளுடன் இந்தியாவில் அறிமுகமானது Kawasaki Ninja 500!
கிராமப்புறங்களை நோக்கி விற்பனையை குறிவைத்துள்ளதால், இதன் விலை சுமார் 80 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இதன் தயாரிப்பு காலதாமதாகும் என்பதால் தீபாவளி சமயத்தில் பஜாஜ் சிஎன்ஜி ரக பைக் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.