இந்தியாவில் அறிமுகமான பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG! இது தாங்க விலை ..!
பஜாஜ் ஃப்ரீடம் 125 CNG : பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125-க்கான புதிய பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் பைக் 330 கி.மீ வேகமாக வரை செல்லும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில், பஜாஜ் ஆட்டோ ஃப்ரீடம் 125 (Bajaj Freedom 125) என்ற சிஎன்ஜி பைக்கை புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கை பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் இயக்கலாம் என கூறி உள்ளனர். பெட்ரோலுக்கு ஆகும் செலவு மற்றும் வாகன புகை வெளிவருவதும் இதில் குறைவு என கூறுகின்றனர். இதனால், காற்று மாசுபடுவதை தடுக்கலாம்
ஃப்ரீடம் 125 என கூறப்படும் இந்த பைக்குக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது. இதனை முன்பதிவு செய்வதற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் மற்றும் அந்நிறுவன ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம். மொத்தம் மூன்று விதமாக இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- என்ஜி04 டிஸ்க் எல்இடி – ரூ.1,10,000 /-
- என்ஜி04 டிரம் எல்இடி – ரூ.1,05,000 /-
- என்ஜி04 டிரம் – ரூ.95,000 /-
இது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த சிஎன்ஜி பைக்கின் அறிமுகமானது இந்திய இருசக்கர வாகன சந்தையில் ஒரு பெரிய அளவில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் சிஎன்ஜியில் இயங்கும் புதிய கார்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தற்போது, இந்த சூழலில் சிஎன்ஜி-யில் இயங்கும் முதல் பைக்கை பஜாஜ் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பைக்கில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்துவது இதுவே உலக அளவில் முதல் முறை ஆகும்.