இணையும் உலகின் இரண்டு முன்னணி கார் நிறுவனங்கள்!
கார் நிறுவனங்களான போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி(AUDI) இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிப்புக்கான உற்பத்தித் தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட்டில் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் போர்ஸெ மிசன் ஈ கான்செப்ட் கார் (Porsche Mission E concept car) அறிமுகப்படுத்தப்பட்டது.
சொகுசு கார் ரகங்களான போர்ஸெ மற்றும் ஆடி கார் நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் இணைந்து பேட்டியளித்தனர்.
மின்சாரத்தால் இயங்கும் கார்களை உற்பத்தி செய்ய 850 பேரை பணிக்கு எடுக்க இருப்பதாகவும், உற்பத்தி செலவினங்களைக் குறைக்க ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் அறிவித்தனர்.
இரு நிறுவனங்களும் தனித்து செயல்பட்டு மின்சார கார்களை உருவாக்கும் பட்சத்தில் 30 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செலவு ஏற்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.