Ather : பெட்ரோல் இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு இணையாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்றாற் போல, எலெக்ட்ரிக் வாகனங்களும் புது புது மாடலை களமிறக்கி வாகன பிரியர்களை கவர்ந்து வருகின்றன
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களில் விற்பனையில் முதன்மையாக இருக்கும் ஏத்தர் நிறுவனம் தற்போது வாடிக்கையாளரை கவரும் வண்ணம் புதிய எக்சேஞ்ச் ஆஃபரை அறிவித்துள்ளது. ஆனால் அதனை குறிப்பிட்ட மாடல் வைத்து இருக்கும் நபர்களுக்கு மட்டுமே என கட்டுப்பாடும் விதித்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஏத்தர் ஸ்கூட்டர் அப்கிரேட் எனும் திட்டத்தில் பதிவு செய்து கொண்ட Ather 450 Gen 1 மற்றும் Gen 1.5 உரிமையாளர்கள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டால் பயனர்கள் வைத்து இருக்கும் ஸ்கூட்டரின் அடுத்த மாடல் வந்தால் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி புதிய மாடலை வாங்கி கொள்ளலாம்.
அதன்படி, எக்சேஞ்ச் திட்டத்தில் பதிவு செய்த ஏத்தர் 450 Gen 1 மற்றும் Gen 1.5 உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கான பில் வைத்து இருக்க வேண்டும். அதனை பெங்களூரு இந்திரா நகரில் உள்ள ஏத்தர் ஸ்கூட்டர் நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை மெக்கானிக் ஆய்வு செய்வர். பின்னர் அதில் காவல்துறை விதிமீறல் அபராதம் இருக்கிறதா என்பதை சார்பார்ப்பார்கள்.
அதன் பின்னர் புதிய எக்சேஞ்ச் ஆபரில் ஸ்கூட்டரை பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு முறைகளை மார்ச் 31, 2024க்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம், ஏத்தர் 450X மற்றும் 450 அபெக்ஸ் ஆகிய வாகனங்களை எக்சேஞ்ச் ஆஃபரில் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு : ஏத்தர் ஸ்கூட்டர் 36 மாதங்களுக்கு மேல் பழையதாக இருந்தால் அபெக்ஸ் 450க்கு 1.10 லட்சம் கொடுக்க வேண்டும். 450X 3.7kWh க்கு 90,000 மற்றும் ப்ரோ பேக் உடன் 450X 2.9kWh க்கு ரூ.80,000. என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதங்கள் குறையும் போது எக்சேஞ்ச் விலை மேலும் குறையும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…