ஏதர் 450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 kWh பேட்டரியுடன் அறிமுகமான ஸ்கூட்டரின் விலை ரூ.1.30 லட்சத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டு வரும் பெட்ரோல்/டீசல் விலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் மக்களின் பார்வை மின்சார வாகனங்கள் மீது திரும்பியுள்ளது. பெட்ரோல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களில் வேகமாக செல்ல முடியாது, அதிக தூரம் செல்லமுடியாது ஆகிய சில மாறுபாடுகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
பெங்களூருவை தளமாகக் கொண்ட எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி (Ather Energy), இன்று தனது புதிய ரகமான ஏதர் 450S ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1,29,999 யில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. ஏதர் அதன் 450 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக கூறப்பட்ட நிலையில், 450S என்ற புதிய குறைந்த விலை ரக ஸ்கூட்டரின் ஆரம்ப விலையை அறிவித்துள்ளது.
அரசின் FAME-II(Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles) மானியத் திருத்தம் வெளியானதை அடுத்து, EV உற்பத்தியாளர் ஏற்கனவே இருக்கும் Ather 450X மற்றும் 450X Pro Pack இன் விலைகளை ரூ. 1.45 லட்சம் மற்றும் ரூ. 1.65 லட்சமாக(எக்ஸ்-ஷோரூம், பெங்களூர்)உயர்த்தியுள்ளனர். அதாவது அரசு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்ட மானியம் ரூ.15,000 இலிருந்து ரூ.10,000/kWh ஆகக் குறைத்துள்ளது.
ஏதர் 450S ரக ஸ்கூட்டர் ஆனது, ஏதரின் ஏற்கனவே இருக்கும் 450 ரக ரேஞ்சின்(Range) ஆரம்ப நிலை ஸ்கூட்டராக விற்கப்படும். இது 3kwh பேட்டரி உடன் அதிகபட்ச வேகமாக 90 கிமீ வேகத்தை வழங்கும் வகையில், IDC வரம்பில்(Indian Driving Condition) ஒருமுறை சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் வரை செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் ஏதர் 450S-க்கான முன்பதிவு ஜூலை மாதம் முதல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.
இது தவிர 450S-க்காக வாடிக்கையாளர்கள் Ather 450X க்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். நீங்கள் புதிதாக எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க விரும்பினால் உங்களுக்கு தரம் மற்றும் உத்தரவாதத்தை ஏதர் ஸ்கூட்டர்கள் வழங்கும் எனவும், புதிய Ather 450S இந்திய சந்தையில் 450X மற்றும் 450X Pro Pack ரக வாகனங்களுடன் சேர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…