முதல் முறையாக புதிய கார் வாங்க போறீங்களா? இதோ உங்களுக்காக மூன்று கார்கள்!
Cars : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு நாளும் முன்னணி நிறுவனங்களின் புதிய மாடல் கார்கள் அறிமுகமாகி வருகிறது. இதனால் புதிய கார் வாங்குபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், முதல் முறையாக புதிய கார் வாங்க நினைப்பவர்கள், தற்போது சந்தையில் உள்ள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள 3 கார்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
டாடா பஞ்ச்:
டாடா நிறுவனத்தின் சிறந்த SUV ரக கார்களில் Tata Punch ஒன்றாகும். மேலும், SUV கார்கள் பட்டியலில் முதல் கார் தான் இந்த டாடா பஞ்ச். இடம் வசதி, பாதுகாப்பு ஆகிய அம்சங்களை கொண்ட டாடா பஞ்ச், நாட்டில் அதிகம் விற்பனையாகும் SUV ஆகும். இந்த கார் 5 நட்சத்திர பாதுகாப்பை வழங்கும் ஒரு மலிவு விலை SUV ஆகும். 16 இன்ச் அலாய் வீல்களை கொண்ட பஞ்ச், கரடுமுரடான சாலைகளில் ஓட்டுவதை எளிதாக்குகிறது.
Read More – 100 பைக் மட்டுமே.. முன்பதிவுக்கு முந்துங்கள்! KTM நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பு!
டாடா பஞ்ச் காரில் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஸ்பீக்கர் ஆடியோ அமைப்பு, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், சன்ரூஃப்பை கொண்டுள்ளது. பவர்டிரெய்னுடன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின், 85 பிஎச்பி அதிகபட்ச சக்தி, 115 என்எம் பீக் டார்க் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி இன்ஜின் என இரு வகை உள்ளது.
டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT (பெட்ரோல் மட்டும்) ஆகியவை அடங்கும். பெட்ரோல் பயன்முறையில் 20.09 kmpl மைலேஜூம், CNG பயன்முறையில் 26.99 km/kg மைலேஜூம் வழங்குகிறது. எனவே, இந்த டாடா பஞ்ச் கார் ரூ.7.27 லட்சம் முதல் ரூ.12.16 லட்சம் (ஆன்-ரோடு) விற்பனை செய்யப்படுகிறது.
டாடா டியாகோ:
இந்த பட்டியலில் இரண்டாவதாக டாடா டியாகோ (Tata Tiago) கார் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பான ஹேட்ச்பேக் என்ற வகையில், டியாகோ பல பவர்டிரெய்ன் விருப்பங்களை வழங்குகிறது. ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் வடிவமைப்பில் வலுவான ஷோல்டர் லைன் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. டூயல்-டோன் டேஷ்போர்டு, பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.
Read More – சும்மா கெத்தா, ஸ்டைலா இந்தியாவில் என்ட்ரி கொடுக்கு காத்திருக்கும் Honda Africa Twin!
இதுபோன்று, 7-இன்ச் ஹர்மன் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், ட்ரை அம்பு வடிவத்துடன் கூடிய துணி இருக்கைகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. Tiago ஒரு பெட்ரோல் மற்றும் CNG இன்ஜின் விருப்பத்தை வழங்குகிறது. அதன்படி, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 86 பிஎச்பி, 113 என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது, அதே நேரத்தில் சிஎன்ஜி மாடலில் 73 பிஎச்பி பவர் உள்ளது.
CNG பவர்டிரெயினில் AMT டிரான்ஸ்மிஷன் விருப்பங்களை வழங்கும் இந்தியாவில் முதல் கார் டியாகோ ஆகும். மேலும், டாடா டியாகோ காரின் விலை ரூ 6.72 லட்சம் முதல் ரூ 10.29 லட்சம் (ஆன்-ரோடு) விற்பனையாகிறது.
ஹோண்டா அமேஸ்:
இந்தப் பட்டியலில் கடைசியாக ஹோண்டா அமேஸ் கார் இடம்பிடித்துள்ளது. கடந்த 2018 முதல் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனையாகும் ஹோண்டா அமேஸ் கார் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பெரிய மேம்படுத்தலைப் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓல்ட் மாடலாக இருந்தாலும், அமேஸ் நல்ல மைலேஜ், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
Read More – இனி டெக்ஸ்ட் to வீடியோ… விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!
7 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்,உயரத்தை சரி செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை அடங்கும். ஹோண்டா அமேஸ் 90 பிஎச்பி மற்றும் 110 என்எம் பீக் டார்க் என 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய சிறந்த CVT ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு 18.3-18.6 கிமீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை ரூ.8.44 லட்சம் முதல் ரூ.11.64 லட்சம் (ஆன்-ரோடு) ஆகும்.