டாப் கியரில் பஜாஜ் வாகனங்கள்.! ராயல் என்ஃபீல்டு நிலைமை என்ன.?

Bajaj Motorcycles

Bajaj –  இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது இருசக்கர வாகன விற்பனையில் கணிசமான அளவு முன்னேற்றத்தை காண்கின்றன. மழை, வெள்ளம், மற்ற பிற இயற்கை இன்னல்கள் காரணமாக டிராக்டர்கள் விற்பனை என்பது சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனைக்கும், இந்த வருட பிப்ரவரி மாத இறுதி வரையிலான வாகன விற்பனை பற்றிய விவரங்களை தனியார் செய்தி நிறுவனமான NDTV Profit தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பஜாஜ் :

கடந்த பிப்ரவரி 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 பிப்ரவரி மாதம் பாஜாஜ்  வாகன இருசக்கர வாகன உற்பத்தி மொத்தமாக 25 சதவீதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023 வரையில் இருசக்கர வாகன விற்பனை 2,94,684ஆக உள்ளது.

உள்நாட்டில் இரு சக்கர வாகனங்கள் விற்பனையானது 42 சதவீதம் அதிகரிது 1,70,527 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது. இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியானது 8 சதவீதம் அதிகரித்து 1,24,157ஆக உள்ளது.

அதே போல, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை யானது 16 சதவீதம் அதிகரித்து 51,978 வாகனம் விற்பனை ஆகியுள்ளது. இப்படியாக பஜாஜ் வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை பிப்ரவரி 2024இன் படி, 24 சதவீதம் அதிகரித்து 3,46,662ஆக உள்ளது.

Read More – இந்தியர்களிடம் எலெக்ட்ரிக் கார்களுக்கு எகிறும் மவுசு! ஏன் தெரியுமா?

ராயல் என்பீல்டு :

ராயல் என்பீல்டு தலைமை நிறுவனம் (Eicher Motors Ltd) வெளியிட்ட  மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையானது பிப்ரவரி 2024 வரையில் 6 சதவீதம் உயர்ந்தது, 350 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட மாடல்களின் விற்பனை  2 சதவீதம் மட்டுமே  அதிகரித்து 66,157 வாகனங்கள் விற்பனை இருந்தது. என்ஜின் திறன் 350சிசிக்கு மேல் உள்ள வாகனங்களின் விற்பனை 45 சதவீதம் அதிகரித்து 9,778ஆக உள்ளது. ராயல் என்பீல்டு வாகன ஏற்றுமதியானது 13 சதவீதம் அதிகரித்து 8,013 என உள்ளது.

மஹிந்திரா :

மஹிந்திரா நிறுவனமானது தங்கள் வாகன விற்பனையில், பருவமழை பாதிப்பு காரணமாக தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் டிராக்டர் விற்பனை சற்று குறைந்துள்ளது. இருப்பினும், மற்ற மாநிலங்களில் குறிப்பாக கோதுமை மகசூல் செய்யும் மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் டிராக்டர் விற்பனை இருந்தது என விற்பனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வர்த்தக வாகனங்களின் விற்பனை 8 சதவீதம் அளவுக்கு சரிந்து 15,779 வாகனங்கள் பிப்ரவரி மாதம் வரையில் இருந்தது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 6,158ஆக உள்ளது. டிராக்டர் விற்பனை 16 சதவீதம் சரிந்து 21,672 ஆக பதிவாகியுள்ளது.

Read More – விற்பனையில் புதிய மைல்கல்… அடுத்த வேரியண்ட்டை அறிமுகம் செய்த TVS நிறுவனம்!

எஸ்கார்ட்ஸ் :

மஹிந்திரா போல இன்னொரு முன்னணி வாகன உற்பத்தி நிருணமான எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட் நிறுவனம், வாகன விற்பனையில் பிப்ரவரி 2024 கணக்கீட்டின்படி 17 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.  குறைந்து 6,481 யூனிட்டுகளாக உள்ளது, பருவமழை பாதிப்பை இந்த நிறுவனமும் எதிர்கொண்டுள்ளது.

பருவமழை, அடுத்த நிதியாண்டில் டிராக்டர் விற்பனையை அதிகரிக்கும் என்று டிராக்டர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டு விற்பனை கிட்டத்தட்ட 17 சதவீதம் சரிந்து 6,041 ஆக இருந்தது. ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்து 440 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை என்ற விவரம் பதிவாகியுள்ளது.

மற்ற வாகனங்களின் விற்பனை விவரங்களை பின்னர் வரும் செய்தி குறிப்பில் காணலாம்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi