சர்வதேச சந்தைகளில் TVS HLX சீரியஸ் பைக் 35 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக டிவிஎஸ் (TVS) நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் திகழ்கிறது. சமீப காலமாக டிவிஎஸ் நிறுவனம்தங்களது இரண்டு சக்கர வாகன விற்பனையில் புதிய சாதனைகளை படைத்தது வருகிறது.
டிவிஎஸ் என்றால் நமக்கு ஞாபகம் வருவது முதலில் டிவிஎஸ் 50 தான். ஒரு காலத்தில் டிவிஎஸ் 50 பைக் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, தற்போதும் தான். ஆனால், தற்போது அந்த மாடல் பைக் நிறுத்தி பல வாருங்கள் ஆகிறது. இருப்பினும், இப்போதும் அந்த பைக்கை பார்க்க முடிகிறது. ஏனென்றால், அனைத்திற்கும் பயன்படும் விதமாகவும், நல்ல மைலேஜ் உள்ளிட்டவையால் இன்றும் இருந்து வருகிறது.
இதன்பிறகு டிவிஎஸ்-யின் அடுத்தடுத்த மாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட TVS HLX Series தற்போது சர்வதேச சந்தையில் 35 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. முதலில் ஆப்பிரிக்காவில் அறிமுகமான TVS HLX சீரியஸ், தற்போது லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 50 நாடுகளில் விற்பனையில் உள்ளது. பல்வேறு உலகளாவிய சந்தைகளில் TVS HLX பைக்கின் புகழ் பரவலான ஜொலித்து வருகிறது.
இந்த சாதனையை நினைவுகூரும் வகையிலும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்திலும், TVS மோட்டார் நிறுவனம் TVS HLX 150F என்ற புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. இந்த புதிய TVS HLX 150F மேம்படுத்தப்பட்ட மாடலாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே பயன்படுத்திய ஈகோத்ரஸ்ட் எஞ்சின், ஒரு சக்திவாய்ந்த மற்றும் சிறந்த செயல்திறனை கொண்டதாக இருக்கிறது.
கூடுதலாக, டிவிஎஸ் எச்எல்எக்ஸ் 150எஃப் பைக்கானது பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் புதிய கிராபிக்ஸ் மற்றும் துடிப்பான நிறங்களால் புதுப்பிக்கப்பட்டு ஒரு ஸ்டைலான பைக்காக அறிமுகமாகியுள்ளது. எனவே சிறந்த தயாரிப்பு, தரம் மற்றும் செயல்திறனில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம், TVS நிறுவனம் உலகளாவிய வாகன சந்தையில் வளர்ச்சி மற்றும் சிறந்து விளங்குகிறது என்றே கூறலாம்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…