ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு “Creta” கார் விற்பனை! இந்திய சாலைகளில் மட்டும் 10 லட்சம்…

Hyundai Creta

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் பிளாக்பஸ்டர் மாடலான கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) கார் இந்தியாவில் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு கார் விற்பனையாகி, தற்போது 10 லட்சத்தை கடந்து சாதனை புரிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சொகுசு மடல்களான எஸ்யூவி (SUV) கார்கள் மீது மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டும் நிலையில், இந்தியாவில் மிட்-சைஸ் SUV மாடல் வளர்ச்சி பெற்று வருகிறது.

அந்தவகையில், இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் திகழ்கிறது. இந்த சுழலில், ஹூண்டாய் நிறுவனம் தனது மிட்-சைஸ் எஸ்யூவி காரான கிரெட்டாவை முதல் முறையாக 2015-இல் அறிமுகம் செய்தது. இந்த ஹூண்டாய் கிரெட்டா மாடல் உள்நாட்டில் உள்ள SUVகளில் வெற்றிக்கரமான மாடல்களில் ஒன்றாகும்.

mXmoto: புதிய எலக்ட்ரிக் பைக்.. 8 ரூபாய் செலவு செய்தால் 220 கி.மீ பயணம்..!

இதனால், ஹூண்டாய் கிரெட்டா மாடல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றது அதன்படி, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே மாதத்திலேயே, அந்த கார் 60,000 முன்பதிவுகளை பெற்றது. இந்த மாடல் இப்போது தொடர்ந்து 8 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நடுத்தர அளவிலான SUV ஆக உள்ளது. அதாவது, 8 ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் கிரெட்டா, தற்போது பல தலைமுறைகளுடன் உள்நாட்டு சந்தையில் 10 லட்சம் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு கிரெட்டா கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 10 லட்சம் கிரெட்டா கார்கள் இந்திய சாலைகளில் மட்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. 2015ல் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடலின் முதல் தலைமுறை ரூ 8.59 லட்சம் விலையில் தொடங்கியது. அப்போது, 1.6 லிட்டர் பெட்ரோல், 1.4 அல்லது 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் என மூன்று வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, 2020 ஆம் ஆண்டில் கிரெட்டாவின் இரண்டாம் தலைமுறை மாடல் ரூ 9.9 லட்சம் என்ற தொடக்க விலையுடன் களத்தில் இறங்கியது, விற்பனையை அதிகப்படுத்தியது. பின்னர் கடந்த 2024 ஜனவரி மாதம் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மடலானது அறிமுகமான உடனே 60,000 முன்பதிவுகளை பெற்று, மற்றொரு வெற்றிகரமான இன்னிங்ஸைக் தொடங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025