வருகிறது 81 புதிய மாடல்கள்…கார் பிரியர்களுக்கு குட் நியூஸ் இதோ.!!

81 new model CARS launches this year

இந்திய கார் தயாரிப்பாளர்கள், முந்தைய ஆண்டு விற்பனை சாதனை முறியடித்த முனைப்பில், கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு சாதனை படைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இந்த ஆண்டு 81 புதிய மாடல்களை கொண்ட கார்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

இதில் வழக்கமான ஐசி (internal combustion) இயந்திரங்கள் கொண்ட EV (எலக்ட்ரிக் கார்கள்)  கார்கள் அடங்குகிறது. இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த 81 மாடல்கள் கொண்ட கார்களை வெளியீட திட்டமிடபட்டுள்ளது.  இதன் மூலம் ஒட்டுமொத்தமாக, இந்திய வாகன சந்தை இந்த ஆண்டு ஏற்றம் அடைய உள்ளது.

81 புதிய மாடல் கார்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது கடந்த ஆண்டை விட 50% அதிகமாகும்.  (கிரில்ஸ்) முன்புற விளக்குகள், பின்புற விளக்குகள் போன்ற சிறிய மாற்றங்கள், மேம்படுத்த பட்ட அம்சங்களுடன் கூடிய  ஃபேஸ்லிஃப்டு கார்கள் , தலைமுறை (GEN.changes) மாற்றங்கள் மற்றும் பெயர்ப்பலகைகளுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும், SUV விற்பனை உயர்ந்து, அந்த கார் வகைக்குள் புதிய துணைப் பிரிவுகள் வெளிவருவதால், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களுக்கு ஏற்ப கார் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து பல கார்களை தயாரிக்க ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு பல மாடல்கள் நிறுத்தப்பட்ட பிறகு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் கார் உற்பத்தியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த ஆண்டு 81 மாடல்கள் வருவதால் கார் பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்