5 லட்சம் கார்களை விற்று போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் மாருதி சுஸூகி பலினோ!! அதன் சிறப்பம்சங்கள்!!!
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது .மாருதி சுஸூகி பலினோ.
இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் நிறுவனம் மாருதி சுஸூகி. இந்நிறுவனம் 2015ஆம் இந்தியாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டனர். ப்ரீமியம் ஹேட்ச்பேச் மாடலாக வெளிவந்த பலினோ மாடல் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசிய நாடுகள் என ஏற்றுமதி விற்பனையில் கெடிகட்டி பறக்கிறது.
இதுவரை இந்த பலினோ மாடல் காரை 5 வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். இதன் மூலம் ப்ரீமியம் ரக கார்களின் விற்பனையில் இந்த மாடல் முதலிடத்திற்கு வந்து ஹூண்டாய் i20, ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. வெறும் 38 மாதங்களில் இந்தியாவில் மட்டும் 5 லட்சம் கார்களை விற்பனை சாதனை புரிந்துள்ளது மாருதி சுஸூகி.
ஒருநாளைக்கு 438 பலினோ கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர்.
ஸ்விப்ட் காரின் இமாலய சாதனை குறித்த செய்தி வெளியான ஒரு சில தினங்களில், பலினோ காரின் புதிய சாதனை குறித்த செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி சுஸுகி நிறுவனமானது தனது பிரீமியம் நெக்ஸா அவுட்லெட்கள் மூலமாக பலினோ காரை விற்பனை செய்து வருகிறது.
ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் (Anti-theft Security System), இபிடி உடனான ஏபிஎஸ் மற்றும் ட்யூயல் ஏர் பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் பலினோ காரில் இதுவரையிலும் எந்தவிதமான அப்டேட்டையும் செய்யவில்லை. அப்படி இருந்தும் கூட பலினோவின் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. உண்மையில் வெயிட்டிங் பீரியட்டை குறைப்பதற்காக, பலினோவின் உற்பத்தியை மாருதி சுஸுகி சமீபத்தில் அதிகரித்தது என்பது குறிப்பிடதக்கது.
DINASUVADU