இந்தாண்டுக்கான ஜீப் அசத்தும் ராங்கலர் ரூபிகான்…!லேட்டஸ்ட் தகவல்கள்
இந்தியாவில் இந்தாண்டுக்கான ஜீப் ராங்கலர் ரூபிகான் சோதனை செய்யபடுகிறது. மேலும் இது இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.அப்படி சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகானின் புகைப்படங்கள் எல்லாம்
இணையத்தில் லீக் ஆகியுள்ளது.இந்தாண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் இந்த ஜீப்களின் மாடல் சோதனை புகைப்பைடமானது இணையத்தில் பலமுறை லீக் ஆகியுள்ளது.
4 ம் தலைமுறையான இந்த ராங்லர் ரூபிகான் மாடல் ஜீப்பில் மூன்று கதவுகள் உள்ளிட்ட வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிக்கு மிக சிறப்பாக உள்ளது.ARAI ஸ்டிக்கர்களுடன் களமிறங்கி உள்ளத்தில் இருந்தே சோதனை செய்யப்படுவதை உறுதி செய்து உள்ளது.
இதன் வசதிகள் :
புதிய ஜீப் ரகமான இந்த மாடலில் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ராங்லர் ரூபிகானில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் மேலும் இந்த என்ஜின் 259 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறனை கொடுக்கும்.3.6 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 285 பி.ஹெச்.பி. பவருடனும் 325 என்.எம். டார்க் செயல்திறனையும் அளிக்கிறது.இத்தகைய இரு என்ஜின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இவற்றுடன் வர உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களை விட இது அதிகம் நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.இத்தகைய மாடல்கள் ரூ.58.74 லட்சம் முதல் ரூ.67.60 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.