2.30 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூர்! இந்தியாவில் களமிறங்கும் புல்லட் ரயில்!!
சென்னையிலிருந்து மைசூருக்கு பெங்களூரு வழியாக செல்ல ரயிலில் குறைந்தது 7 மணி நேரமாகும். இந்த பயண நேரத்தை புல்லட் ரயில் மூலம் குறைக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
ஏற்கனவே, டெல்லி – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் கொண்டு வருவதற்கு இடம் தர அங்குள்ள விவசாயிகள் போர்கொடி தூக்கியதன் விளைவாக அந்த புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி கொடுப்பதை தற்காலிகமாக ஜப்பான் நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் , சென்னை – மைசூர் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு எந்த விதமான இடப்பிரச்சனையும் வராது என்று நம்பப்படுகிறது. ஆதலால் இத்திட்டத்திற்கான ஆய்வு அறிக்கையை ஜெர்மனி தனது நாட்டு தூதுவர் மூலம் இந்திய ரயில்வே துறைக்கு அனுப்பியுள்ளது.
இந்த சாத்யகூறுகளில் சென்னை – மைசூர் இடையே 435 கிமீ தூரத்தை 2.25 மணி நேயத்தில் கடந்து விடும் ஆதாவது மணிக்கு 320கிமீ வேகத்தில் பறந்து செல்லும்.
இந்த திட்டம் செயல்படுத்த சமார் 1 லட்சம் கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2030இல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்ப்படுகிறது. இது சில இடங்களில் குகைக்குள்ளும், பல இடங்களில் உயரமான தூண்கள் மூலமும் பாதைகள் அமைக்கப்படும். இது போல சென்னை – மும்பை, மும்பை – நாகபூர் , டெல்லி – கொல்கத்தா , டெல்லி – மும்பை என பல இடங்களில் புல்லட் ரயிலுக்கான சாத்தியகூறுகள் இருக்கிறதா என ஆராயப்பட்டு வருகின்றன.
DINASUVADU