ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு இவ்வளவு மவுசா?! நீண்டுகொண்டே போகும் காத்திருப்போர் பட்டியல்!!!
பட்ஜெட் மாடல் காரகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள மாடல் காராக உருவெடுத்துள்ளது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார். இதன் டிசைன், வசதி, விலை என அனைத்தும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தபடி அமைந்துள்ளதால் இதன் முன்பதிவு களைகட்டி வருகிறது.
இதனை பற்றி ஷோரூம்களில், 2.11 லட்சம் பேர் வாங்குவதற்கு விசாரித்து சென்றதாகவும், 38,500 நபர்கள் வாங்குவதற்கு புக் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பலர் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போவதால் காத்திருப்பு காலம் நான்கு மாதம் வரை நீண்டு கொள்கிறது. முன்கூட்டியே புக்கிங் செய்தவர்களுக்கு இரண்டு மாதங்களில் டெலிவரி செய்ய நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை கவரும் தோற்றத்தை பெற்றிருக்கிறது. இந்த ரக கார்களில் மிகச் சிறப்பான கேபின் இடவசதியை இந்த மாடல் பெற்றுள்ளது. மேலும், இந்த மாடலில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த புதிய சான்ட்ரோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் விபத்தின்போது கதவுகள் தானாக திறக்கும் வசதி என வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் இந்த மாடல் உருவாகியுள்ளது.
இந்த ஹூண்டாய் சான்ட்ரோ காரில் இருக்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாது, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைப்பதும் இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயம். இந்த புதிய மாடல் 7 வண்ணங்களில் கிடைக்கிறது.
DINASUVADU