விற்பனையில் புகழ்பெற்ற பைக்கினை அந்நிறுவனம் இணையத்தளத்தில் இருந்து நீக்கம்…!!!! அதிர்ச்சியில் அந்நிறுவன வாடிக்கையாளர்கள்…!!!
ஹோண்டா நிறுவனத்தின் விற்பனையில் புகழ்பெற்ற சிபிஆர்650எஃப் பைக்கினை அந்நிறுவன இணையத்தளத்தில் இருந்து தற்போது நீக்கியுள்ளது. இது பல்வேறு கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எழுப்பியுள்ளது. மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் டெல்லியில் கடந்த 2015ம் ஆண்டு 650 சிசி திறன் கொண்ட ஹோண்டா சிபிஆர்650எஃப் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது.
இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்த பைக் டெல்லி ஷோரூம் விலையில் 7.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு வந்தது.இந்தியாவில் சிபிஆர்650எஃப் பைக்கின் உதிரிபாகங்களாக தருவிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படது. மேலும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் முதல் 4 சிலிண்டர் எஞ்சின் கொண்ட பைக் மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ளூரில் தயாரான பாகங்களின் அளவு 5 சதவீதம்தான்.
பிற பாகங்கள் அனைத்தும் ஜப்பான், தாய்லாந்து ஆலையிலிருந்து வரவழைக்கப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டது.இதில் ஓட்டுபவருக்கு மிகச்சிறந்த ரைடிங் பொசிஷனை கொண்ட என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்காக ஹோண்டா சிபிஆர்650எஃப் அறிமுகம் செய்யப்பட்டது. தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களை விரும்புவோருக்கு சரியான தேர்வாக சிபிஆர்650 இருந்து வந்தது. இருவர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்டது.
இந்நிலையில் தற்போது சிபிஆர்650எஃப் பைக் முன்னறிவிப்பின்றி ஹோண்டா இனையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இது பல கேள்விகளை ஹோண்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. சிபிஆர்650எஃப் பைக் முழுமையாக நிறுத்தப்பட்டதா அல்லது மாற்று மாடல் வருகிறதா என சந்தேகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனால் ஹோண்டா பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
DINASUVADU..