ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக களமிறக்கப்படும் மஹிந்திரா நிறுவனத்தின் ஜாவா மாடல் பைக்குகள்!
மோட்டார் சைக்கிள் துறையில் இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ள நிறுவனம் ராயல் என்ஃபீல்ட். இந்நிறுவனத்தின் பைக்குகள் என்றால் இளைஞர்களுக்கு அலாதி பிரியம். தற்போது இந்நிறுவனத்திற்கு போட்டியாக 70, 80 களில் அப்போதைய இளைஞர்களின் கனவு பைக்குகளாக இருந்த ஜாவா மாடல் பைக்குகள் தற்போது ராயல் என்ஃபீல்டிற்கு நேரடி போட்டியாக தற்போது களமிறங்கியுள்ளது.
இடையில் தனது பைக் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம். தற்போது மீண்டும் பைக் தயாரிப்புக்கு இறங்கியுள்ளது. இதற்க்கு முக்கிய காரணம் மஹிந்திரா நிறுவனம் தான். காரணம் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை மஹிந்திரா நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளதாம். மஹிந்திரா நிறுவனம் தான் ராயல் என்ஃபீல்ட்டிற்கு போட்டியாக மீண்டும் ஜாவா பைக்கை அறிமுகப்படுத்துவதில் மும்முரமாக இருந்துள்ளது.
இந்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் அண்மையில் தனது ஜாவா மாடல் பைக்குகளின் மூன்று மாடலான, ஜாவா, ஜாவா 42, ஜாவா பெராக் ஆகிய மாடல்களை களமிறக்கியுள்ளது. இம்மாடல்கள் ஜனவரியில் விற்பனைக்கு வரவுள்ளன. இதில் ,ஜாவா, ஜாவா 42 மோட்டார் சைக்கிள்கள் ரோட்ஸ்டர் ஸ்டைலிலும், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் பாபர் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜாவா அட்வென்ச்சர் டூரர் வகை மாடல் பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது.
அட்வென்ச்சர் டூரர் ரக பைக்கை பற்றி முன்னனி நிபுணர்களிடம் கேட்டதற்கு, கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனதிற்கு அட்வென்ச்சர் ரக பைக்குகளை தயாரிக்க எண்ணம் உள்ளது. ஆனால் அது தற்போது இல்லை என குறிப்பிட்டார். அதிலிருந்து தெரிந்து கொண்டது என்னவென்றால், அட்வென்ச்சர் ரக பைக்குகள் வரும் ஆனால் அது வருவதற்கு 2020ஐ தாண்டிவிடும். மேலும் அப்படி வந்தால், அது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜாவா மாடலின் சந்தைப்படுத்துதல் நிகழ்வு, ராயல் என்ஃபீல்டின் விற்பனையை கண்டிப்பாக குறைக்கும் என வள்ளலுனர்கள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU