பறப்பதற்க்கு விமானம் தயாரித்து ஹோட்டல் நடத்தபோகும் விவசாயி!
சீனாவை சேர்ந்த ஸத யுவே என்ற விவசாயி பள்ளிபடிப்பை முடித்து விட்டு பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை பயிர்செய்து வருகிறார். இவருக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை அதுவும் சொந்தமாக விமானம் வாங்கி அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை.
அதற்காக கடுமையாக உழைத்து தன்னால் புதிதாக விமானம் வாங்க முடியாது என தெரிந்து , அதனை தயாரிக்க முன் வந்தார். அதற்க்கு பக்கபலமாக அவரது நண்பர்கள் 5 பேர் ஸூ யுவிக்கு உதவி செய்தனர். இவர் ஆரம்ப காலத்தில் தொழிற்சாலையில் வெல்டிங் வேலை செய்து வந்ததால் இவருக்கு விமான தயாரிப்பு நணபர்கள் உதவியுடன் கொஞ்சம் எளிதாக இருந்தது.
இந்த விமானம் தயாரிக்க இவருக்கு சுமார் 3 கோடி (இந்திய மதிப்பு) செலவாகி உள்ளது. ஆனால் இதனை பறக்க வைக்க தற்போது உபயோக படுத்த முடியாது ஆகையால் தற்போது இதனை ஹோட்டலாக மாற்ற திட்டமிட்டுள்ளார். இங்கு வருவோருக்கு சிகப்பு கம்பளம் விரித்து பிரதமரைபோல உபசரிப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.
இந்த விமானத்தின் வடிவமைப்பு ஏர்பஸ் A320 வகையை போல உள்ளதாம். இன்ஜின், இறக்கைகள், காக்பிட் ஆகியவை சேர்த்து 60டன் எடையுள்ள ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.