பறக்கும் டாக்ஸியை விரைவில் களமிறக்குகிறது ஆடி நிறுவனம்!!
கார் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக விளங்கும் ஆடி நிறுவனம் தற்போது பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்த தற்போது சோதனை ஓட்டத்தை செயல்படுத்தி காட்டியுள்ளது.
இந்த பறக்கும் டாக்சியை ஆடி கார் நிறுவனம் ஏர்பஸ் மற்றும் இட்டால்டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கி இருக்கிறது. ட்ரோன் வகையை சேர்ந்த இந்த பயணிகளை சுமந்து செல்லும் பறக்கும் டாக்சியானது பாப் அப் நெக்ஸ்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் சிறப்பு என்னவெனில் இதனை இரண்டு விதமாகவும் பயன்படுத்தும்படி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது பயணிள் பயணிக்கும் பகுதி ஆடி காராகவும், அதனை ட்ரோனுடன் இணைக்கும் பகுதியும் இதனுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதனை ட்ரோனுடன் இணைத்து செயல்படவைக்க முடியும்.இல்லையென்றால் இதனை சாதாரண ஆடி காராக பயன்படுத்தவும் முடியும்.
அதாவது நாம் இருக்கும் இடத்திலிருந்து ஆடி காரில் ட்ரோன் உள்ள இடத்திற்கு சென்று அங்கிருந்து ட்ரோனை இணைத்து பறந்து செல்ல முடியும். இந்த ட்ரோன் தொடர் சோதனை ஓட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட முயற்சிகளில் இந்த பறக்கும் டாக்சி உண்மையான வடிவத்திற்கு மேம்படுத்தப்படும். இந்த வாகனம் பேட்டரியில் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள்ளது. மேலும் இவை, தானியங்கியாக பயன்படுத்தபட உள்ளதால் இதனை இயக்க தனி பைலட் தேவை இல்லை.
DINASUVADU