டெஸ்டில் படுதோல்வியடைந்த ஜீப் செரோக்கி (Jeep Cherokee)!
மோதலின்போதான பாதுகாப்பு வசதிகளுக்கான சோதனையில் ஜீப் செரோக்கி ((Jeep Cherokee)) ரக எஸ்யுவி ((SUV)) வாகனம், மிகமோசமான தரமதிப்பீட்டை பெற்றுள்ளது.
IIHS எனப்படும் நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனம், வாகனங்களுக்கான தரமதிப்பீட்டை வழங்கும் லாபநோக்கற்ற அமைப்பாகும். இந்த நிறுவனம் 8 எஸ்யுவி ரக வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை நடத்தியுள்ளது. வாகன மோதல்கள் நிகழும்போது, ஓட்டுநர் அல்லாது வாகனத்தில் பயணிப்பவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை கருத்தில் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் மோதல் நிகழும்பட்சத்தில் ஜீப் கிராண்ட் செரோக்கியில் ((Jeep Grand Cherokee)) பயணிப்பவர்களுக்கு வலது காலில் காயம், தலையில் காயம்பட வாய்ப்புள்ளது சோதனை அளவீடுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் சிறந்த வாகனங்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு தகுதிபெற, சோதனைகளில் சிறந்த அல்லது ஏற்கத்தக்க தரமதிப்பீட்டை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.