டாடா நானோவின் மின்சார கார் : ஹைதிராபாத்தில் அறிமுகம்

Published by
மணிகண்டன்

ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ கார் பெரிதும் எதிர்பார்த்த விற்பனையை எட்டாமல் தோல்வி அடைந்ததால் மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்ற நானோ காரை டாடா மோட்டார்ஸ்-ஆனது கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது.

எலக்ட்ரா EV நிறுவனத்திடமிருந்து நானோ காருக்கு 48 வோல்ட் மின்சார அமைப்புகள் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17kW ஆற்றலை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் ஆராய் சான்றிதழின் படி 200 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகவும், அதுவே 4 நபர்களுடன் ஏசி போன்றவை இயக்கப்பட்டால் 140 கிமீ பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் சார்ஜிங் நேரம் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் அதிகார்வப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வரவுள்ள மின்சாரக் காரில் டாடா பேட்ஜ் மற்றும் நானோ பேட்ஜ் ஆகியவை இடம்பெறாது என ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது. எனவே இது முற்றிலும் மாறுபட்ட பிராண்டில் முதற்கட்டமாக டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா நிறுவனத்துக்கு 400 கார்களை வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் 28ந் தேதி ஹைத்திராபாதில் நடைபெற உள்ள விழா ஒன்றில் நானோ காரின் அடிப்படையிலான ஜெயம் நியோ மின்சாரக் காரை பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தொண்டைக்கு இதமான கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி.?

சென்னை ;மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை விரட்ட கற்பூரவல்லி மசாலா டீ செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்;…

2 minutes ago

தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை…அலர்ட் கொடுத்த தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி…

7 minutes ago

ஒரே நாடு ஒரே தேர்தல் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : ஒரே நேரத்தில் மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கு மத்திய அரசு…

1 hour ago

டெல்லி: பெண்களுக்கு ரூ.1,000 ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 வழங்கப்படும் -அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த்…

1 hour ago

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.. கொட்டும் மழையிலும் தீவிர ஏற்பாடுகள்..

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது. திருவண்ணாமலை ; புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை…

2 hours ago

தனுஷ் – நயன்தாரா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

சென்னை: நயன்தாராவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பியோண்ட் தி ஃபேரி டேல்' என்கிற பெயரில் பிரபல ஓடிடி தளமான…

2 hours ago