டாடா நானோவின் மின்சார கார் : ஹைதிராபாத்தில் அறிமுகம்

Default Image

ரத்தன் டாடாவின் கனவு காரான நானோ கார் பெரிதும் எதிர்பார்த்த விற்பனையை எட்டாமல் தோல்வி அடைந்ததால் மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்தை பெற்ற நானோ காரை டாடா மோட்டார்ஸ்-ஆனது கோவையைச் சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைத்துள்ளது.

எலக்ட்ரா EV நிறுவனத்திடமிருந்து நானோ காருக்கு 48 வோல்ட் மின்சார அமைப்புகள் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 17kW ஆற்றலை வெளிப்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் ஆராய் சான்றிதழின் படி 200 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாகவும், அதுவே 4 நபர்களுடன் ஏசி போன்றவை இயக்கப்பட்டால் 140 கிமீ பயணிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் சார்ஜிங் நேரம் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட அம்சங்கள் அதிகார்வப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

வரவுள்ள மின்சாரக் காரில் டாடா பேட்ஜ் மற்றும் நானோ பேட்ஜ் ஆகியவை இடம்பெறாது என ஆட்டோகார் இந்தியா குறிப்பிட்டுள்ளது. எனவே இது முற்றிலும் மாறுபட்ட பிராண்டில் முதற்கட்டமாக டாக்ஸி சேவையை வழங்கும் ஓலா நிறுவனத்துக்கு 400 கார்களை வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவெடுத்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் 28ந் தேதி ஹைத்திராபாதில் நடைபெற உள்ள விழா ஒன்றில் நானோ காரின் அடிப்படையிலான ஜெயம் நியோ மின்சாரக் காரை பிரதமர் மோடி அறிமுகம் செய்ய உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்