குறைந்த விலையில் நமது உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் கார்கள் இவை!

Default Image

உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. அந்தளவிற்கு மக்கள் நெருக்கடி இந்தியாவில் உள்ளது. ஆதலால் மக்கள் பொது போக்குவரத்துகளை நம்பாமல் சொந்த வாகனங்களை வாங்கி அதனை பயன்படுத்தவே மக்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

ஆதலால் நம் நாட்டில் உள்ள ஆட்டோமொபைல் சந்தை மிகவும் பெரியது. உலகில் எந்த வகை புதிய கார் மாடல் வந்தாலும் இந்தியாவிலும் அது சந்தை படுத்தப்படும். அதனால் இங்கு விபத்துகளும் அதிகம் நடைபெறும். ஒரு மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 50 க்கும் அதிகமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் 17 நபர்கள் உயிரிழக்கின்றனர் எனும் அதிர்ச்சி ரிப்போர்ட்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி உரியிரிழப்பவர்கள் பெரும்பாலும், 17 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே.

ஆதலால் புதிதாக களமிறங்கும் ஒவ்வொரு கார் மாடல்களும் பாதுகாப்பு அம்சங்களை முன்னிறுத்தியே விளம்பரப்படுத்தபடுகின்றன. அப்படி இருக்கும் கற்களும் அதிக விலையில் இருக்கும் என்கிற பிரம்மை வாடிக்கையாளர்களிடையே உள்ளது. அப்படி இல்லாமல் 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் எமனையே ஏமாற்றும் கார்கள் இந்தியாவில் உள்ளன. அதனை தற்போது வரிசைப்படுத்தி உள்ளோம்,

1.டாடா நெக்ஸான் (4 ஸ்டார் ) இந்த கார் பெரியவர்களுக்கு 17க்கு, 13 மார்க்கும், சிரியவர்களுக்கு 40க்கு 25 மதிப்பெண்ணும் பெற்றுள்ளது.

2.மாருதி சுஸுகி விட்டாரா ப்ரஷ்ஷா (4 ஸ்டார் ) இந்த கார்கள் பெரியவர்களுக்கு நல்ல பாதுகாப்பை பெற்றுள்ளது. சிறியவர்களுக்கு 2 ஸ்டார் மட்டுமே பெற்றுள்ளது.

3.ரெனோ டஸ்ட்டர் (3ஸ்டார் ) இந்த காரில் டிரைவருக்கு மட்டுமே ஏர் பேக் உள்ளது. இருந்தாலும் இந்த வண்டி வலுவாக கட்டமைக்க பட்டதால் இந்த ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

4.ஃபோல்க்ஸ்வேகன் போலோ (முதலில் 0 ரேட்டிங் பின்னர் மாற்றியமைக்க ப்பட்டு 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது.)

5.மஹிந்திரா என் யு வி 500 (இது 4 ஸ்டார் )மஹிந்திரா நிறுவனத்தின் வலிமையான மாடல்

6.ஹூண்டாய் க்ரெட்டா (4 ஸ்டார் ) இதில் டூயல் ஏர் பேக்குகள் உள்ளன.

7.ஃபோர்ட் அஸ்பயர் ( பெரியவர்களுக்கு மட்டும் 3 ஸ்டார் )

இந்த ரேட்டிங்க் கார்களை க்ரஷ் டெஸ்டிற்கு பயன்படுத்தி, காரினுள்ளே மனிதர்களை போல பொம்மைகளை செய்து அதற்க்கு ஆகும் சேதங்களை கணக்கிட்டு வரிசைப்படுத்தப்பட்டது.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்