கி.மீக்கு 50 பைசாவில் பயணிக்க தயாரா?! மஹிந்திரா நிறுவனம் களமிறக்கும் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள்!!
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தீபாவளிக்கே பட்டாசு வெடிக்க கூடாது என கூறும் அளவிற்கு இந்தியாவில் காற்றும் அதிகமாக மாசுபாடு அடைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெட்ரோல் டீசல்
வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.
அப்படி தற்போது களமிறங்கியுள்ள நிறுவனம் மஹிந்திரா. இந்நிறுவனம் தற்போது தான் புதிய ஜாவா பைக்குகளை ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கியது. தற்போது அந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ என பெயரிடப்பட்டுள்ளது. அந்த ஆட்டோக்கள் இரண்டு வகையாக வெளியாக உள்ளது. ட்ரியோ யாரீ 2+2என நான்கு பேர் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு மாடலான ட்ரியோ 3 நபர்கள் பயணிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டோக்கள் ஐபி67 தொழிற்நுட்பம் என்று சொல்லக்கூடிய தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்க கூடிய வகையிலான பேட்டரியில் இயங்குகிறது. இதில், சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 130 கிமீ வரை பயணம் செய்ய இயலும். கணக்கு படி பாரத்தால் ஒரு கிமீக்கு 50 பைசா மட்டுமே செலவாகும். அதே ட்ரியோ யாரீ வாகனத்தில் 2.30 மணி நேரம் சார்ஜ் செய்தால் 85 கிமீ பயணம் செய்ய முடியும். இந்த ஆட்டோக்கள் 45கிமீ வரை தான் வேகமாக செல்லுமாம்.
DINASUVADU