ஒருமுறை சார்ஜ் செய்தால் 200கிமீ வரை பயணிக்கலாம்! ஹோண்டா நிறுவனம் அதிரடி!!
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டி வருவாதாலும் , சுற்றுசூழலும் வாகனங்கள் வெளியிடும் புகையால் அதிகம் மாசுபடுகிறது என கூறி அரசு பெட்ரோல் டீசல் வாகனங்கள் மீது அதிகமான கட்டுப்பாட்டை வைக்கிறது. மேலும், எலக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்கும் மக்களுக்கு அரசு சில சலுகைகளையும் வழங்குவதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எலக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு பல முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதில் முக்கியமான கம்பெனி மாருதி சுஸூகி தனது முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகபடுத்தியுள்ளது. மாருதி சுஸூகி வேகன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாடல் 2020 ஆம் வருடம் விற்பனைக்கு வர உள்ளது.
இதேபோல எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் முன்னனி கார் உற்பத்தி நிறுவனங்களான, டாடா, டொயோட்டா, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் இந்த எலக்ட்ரிக் கார் போட்டியில் குதித்துள்ளனர்.
டீசல் வாகனங்களில் லேட்டாக தடம் பதித்த ஹோண்டா நிறுவனம் தற்போது அதேபோல இல்லாமல் சுதாரித்துக்கொண்டு எலக்டரிக் வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ஆனால் இந்த மாடலை தயாரித்து 2023இல் தான் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த எலக்டரிக் காரானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 – 200 கிமீ வரை பயணம் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
DINASUVADU