ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் அறிமுகப்படுத்தப்படும் புதிய கேடிஎம் 200சிசி பைக்!
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பு சட்டத்தின்படி, 125 சிசியை விட அதிகமான திறன் கொண்ட பைக்குகளுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என கூறியதால், மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய மாடல்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை புகுத்தி வருகின்றனர்.
அதன்படி, ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற கேடிஎம் தயாரிப்பு நிறுவனம், தனது 200சிசி மாடலில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை புகுத்தி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேடிஎம் டியூக் 200சிசி பைக்கின் இரு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை வைத்துள்ளது.
கேடிஎம் ட்யூக் 200 ஏபிஎஸ் மாடலில் இருக்கும் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24 பிஎச்பி பவரையும், 19.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
DINASUVADU