இந்தியாவை ஏமாற்றிய பன்னாட்டு கார் நிறுவனம்..!!! தகுந்த சவுக்கடியை கொடுத்த பசுமை தீர்ப்பாயம்…!!!மற்ற நிறுவனங்களுக்கும் மரண பயத்தை காட்டிய பசுமை தீர்ப்பாயம்…!!!!
இந்தியாவில் தாராளமய கொள்ள்கையை நடைமுறை படுத்தபட்டவுடன் இந்திய தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை சரியத்தொடங்கியது .இதனால் அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தழைக்க ஆரம்பித்தன .இதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனமும் ஒன்று.இந்த நிறுவனம் டீசல் வாகனங்களில்,அது வெளிப்படும் மாசு அளவை குறைக்க சட்ட விரோதமாக செயல்பட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் இதை தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் மாசுக்களை வெளிப்படுத்தியதாக ஃவோக்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஃவோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. அதில் ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் செய்த குற்றத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இது தொடர்பான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில் ஏற்கனவே அளித்த உத்தரவுபடி ஃவோக்ஸ்வேகன் நிறுவனம் நாளை வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடியை செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்பாயம் அதிரடியாக உத்தரவிட்டது.இதன்படி நவம்பர் மாதம் அளித்த உத்தரவை இதுவரை ஏன் பின்பற்றவில்லை?
இந்த அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் நிறுவன தலைவர்கள் மீது கைது மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் தெரிவித்தார். இந்த செய்தி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த தீர்ப்பு இந்த நிறுவனம் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் இந்திய அளித்த எச்சரிக்கையாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.