இத்தாலியில் 836சிசி கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்கிறது ராயல் என்ஃபீல்ட்!
இளைஞர்களுக்கு மிகவும் பைக் மாடலான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் , தற்போது புதிதாக தயாரித்த்து வரும் 836சிசி திறன் கொண்ட புதிய மாடலை களமிறக்க உள்ளது. இந்த அறிமுகம் இத்தாலியில் நடக்கும் ஐக்மா சர்வதேச மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது.
கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், இன்டர்செப்டார் 650 மாடல்கள் அண்மையில் களமிறங்கியது அதன் வரிசையில் தற்போது இந்த 836சிசி திறன் கொண்ட மாடலை இத்தாலியில் களமிறக்க உள்ளது. இந்த புதிய KX மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வண்டி 1937 இல் KX என்கிற மாடலை அறிமுகம் செய்தது. அதனை இந்த காலத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைப்பு செய்ய உள்ளது.
1937ல் தயாரிக்கப்பட்ட 1140 KX மாடல் Ultimate Luxury Motorcycle என்ற கூறி மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. அந்த மாடலில் 1,140சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருந்தது. அதே பாணியில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய KX மாடலை உருவாக்கி இருக்கிறது. இந்த மாடலானது, பாபர் ரக வடிவமைப்பில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கம் வட்ட வடிவான பகல்நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. பழைய 1140 KX மாடலைப் போன்றே, கர்டர் ஃபோர்க்குகள் அமைப்பு கொண்ட முன்புற சஸ்பென்ஷன் கவனித்தக்க விஷயம்.
முன்பக்கம் பெரிய அலாய் வீல்கள் மற்றும் டயர்கள், கச்சிதமான பெட்ரோல் டேங்க், பாபர் ரக மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு உரிய ஒற்றை இருக்கையும், பின்புற டயர் தனியாக இருப்பது போன்ற அமைப்பும் முத்தாய்ப்பான விஷயங்கள். முன்சக்கரத்தில் இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளில் வி- ட்வின் சிலிண்டர் அமைப்புடைய 836சிசி ஆயில் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு மற்றும் போலரிஸ் நிறுவனங்களின் கூட்டணியில் இந்த புதிய 836சிசி எஞ்சின் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு. எஞ்சின் செயல்திறன் குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கலாம்.
இவ்வளவு எதிர்பார்ப்பையும் கூறிய ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் ரசிகர்களை ஏமாற்றியது. ஏனென்றால் இந்த கான்செப்ட் மாடல் விரைவில் தயாரிப்புக்கு வரும் என்ற எதிர்பார்த்த நிலையில் இது நடைமுறைக்கு ஒத்துவராது என கூறி இது நடக்காது என கூறிவிட்டனர்.