அபாச்சி RR 310 ரீலீஸ் தேதி அறிவிப்பு
T.V.S நிறுவனத்தில் மிகவும் விரும்பப்படும் மாடல் அப்பாச்சி தான். இந்த மாடலின் புதிய அறிமுகம் அப்பாச்சி RR 310 டிசெம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளது. அபாச்சி RR 310 மாடல் அகுலா கான்செப்ட் என்ற பெயரில் அறிமுகமானது.
இந்த மாடலானது பி.எம்.டபுள்யூ. G 310 R மாடலை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய மாடலில் ஒரே இன்ஜின் மற்றும் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 313 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34 bhp மற்றும் 28 Nm செயல்திறன் கொண்டுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனமானது பல்வேறு அம்சங்களை முதல் முறையாக வழங்கியுள்ள பெருமையை அப்பாச்சி RR310 பெற்றுள்ளது. மேலும் டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் ஃபேர்டு வடிவமைப்பை கொண்ட மாடலாக இந்த மாடல் இருக்கிறது.
நீண்ட காலமாக உருவாகி வரும் டி.வி.எஸ். அபாச்சி RR310 இந்தியாவில் பலமுறை சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் டி.வி.எஸ். அபாச்சி RR310 மாடலானது, கே.டி.எம். ஆர்.சி. 390, பென்லி 302R மற்றும் கவாசகி நின்ஜா 300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 300 சிசி பிரிவில் இந்தியாவில் கிடைக்கும் மற்ற வாகனங்களை விட அபாச்சி RR310 மாடலில் குறைவான செயல்திறன் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.