மஹிந்திரா நிறுவனம் தனது பழைய மாடலை புதியதாக்கி தனது போட்டி.நிறுவனங்களை விட 4 லட்சம் வரை குறைந்த விலையில் களமிறக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்களை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்400 அல்லது எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது
மஹிந்திரா எஸ்வியூவின் போட்டி மாடலான டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்டு என்டெவர் எஸ்யூவை விட 4 லட்சம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் விலை 23 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலை வருகிற 24ஆம் தேதியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தபடுகிறது. இது சுமார் 184 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் அல்லது 7 அட்டோமேட்டிக் கியர் என இரு தேர்வுகளில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்த அல்டுராஸ் மாடல் G2 மற்றும் G4 என இரண்டு வகையாக வர உள்ளது. G2 மாடல் குறைந்த விலையிலும் 2 வீல் ட்ரைவிங்.சிஸ்டம், G4 மாடல், 4 வீல் ட்ரைவிங் சிஸ்டமானது விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இந்த இரு வகைகளிலும் 7 பேர் பயணிக்க கூடியதாக இருக்கும்.
DINASUVADU
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…