அதிரடி விலை குறைப்பில் மஹிந்திரா எஸ்யூவி! அல்டியூராஸ் சிறப்பம்சங்கள்!!

Default Image

மஹிந்திரா நிறுவனம் தனது பழைய மாடலை புதியதாக்கி தனது போட்டி.நிறுவனங்களை விட 4 லட்சம் வரை குறைந்த விலையில் களமிறக்க உள்ளது. இதன் சிறப்பம்சங்களை தற்போது நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் வர இருக்கிறது. இதுவரை மஹிந்திரா ஒய்400 அல்லது எக்ஸ்யூவி700 என்ற பெயர்களில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி அல்டுராஸ் என்ற பெயரில் வர இருக்கிறது

மஹிந்திரா எஸ்வியூவின் போட்டி மாடலான டொயோட்டா ஃபார்சூனர், ஃபோர்டு என்டெவர் எஸ்யூவை விட 4 லட்சம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இதன் விலை 23 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடலை வருகிற 24ஆம் தேதியன்று வெளியாகும்   என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தபடுகிறது. இது சுமார் 184 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் அல்லது 7 அட்டோமேட்டிக் கியர் என இரு தேர்வுகளில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த அல்டுராஸ் மாடல் G2 மற்றும் G4 என இரண்டு வகையாக வர உள்ளது. G2 மாடல் குறைந்த விலையிலும் 2 வீல் ட்ரைவிங்.சிஸ்டம், G4 மாடல்,  4 வீல் ட்ரைவிங் சிஸ்டமானது விலை அதிகமாகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது. இந்த இரு வகைகளிலும் 7 பேர் பயணிக்க கூடியதாக இருக்கும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்