அதிகமாக டூவீலர் வைத்திருப்பதும் இங்குதான்! அதிகமாக அரசு பேருந்து பயன்படுத்துவதும் இங்குதான்!!
உலக அளவில் மக்கள் தொகையில் இந்தியா இரண்டாம்.இடத்தில் உள்ளது. ஆதலால் இங்குள்ள மக்களின் பேக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வது அரசுக்கு பெரும் பாடாக இருக்கிறது. அதுவும் விழாகாலம் வந்தால் சொந்த ஊர் செல்ல மக்கள் திண்டாடுகின்றனர்.
இந்தியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் நகரங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஏனென்றால் பெரு நகரங்களில்தான் பெரும் தொழிற்சாலைகள் அமைவதால் அங்கு வேலைவாய்ப்பிற்காக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்தின் பக்கம் நகர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் அரசு, அதிகமாக வாகனங்களை உபயோகிக்கும் நகரம், அதிகமாக அரசு போக்குவரத்தை உபயோகிக்கும் நகரம் என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் அரசுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஓர் ரிசல்ட் வெளிவந்தது.
அதாவது. இந்தியாவில் அதிகமாக சொந்த டூவீலரை பயன்படுத்தும் நகரம், அதிகமாக பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நகரம் என இரண்டும் நம்ம சென்னைதான் என தகவல் வெளியாகியுள்ளது. இது அரசுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், அதிகமாக பொது போக்குவரத்தை உபயோகிக்க மாட்டார்கள். ஆனால் இரண்டையும் அதிகமாக உபயோகிக்கும் அளவிற்கு மக்கள் நெருக்கடி சென்னையில் அதிகமாக இருப்பது அரசுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள 75 சதவீத மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இது சென்னையில் உள்ள ஒரு அரசு பஸ் நாள் ஒன்றிற்கு சராசரியாக 1300 பயணிகளை அழைத்து செல்கிறது. இந்தியாவிலேயே ஒரு பஸ் ஒரு நாளுக்கு இத்தனை பயணிகளுக்கு பயன்படுவது சென்னையில்தான்.
DINASUVADU