ப்ரீமியம் கார் சந்தையில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர் ரக கார். மிரட்டும் தோற்றம். சாலை ஆளுமை. உழைப்பு, கம்பீரம் என வாடிக்கையாளர் மனதில் நீங்கா இடம் பிடித்த்துள்ளது டொயோட்டா ஃபார்ச்சுனர். இதன் மார்க்கெட்டை குறைக்க இதற்க்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனம் ராஜஸ்தானில் பிரமாண்டமாக அல்டுராஸ் ஜி4 எஸ்யுவி மாடலை களமிறங்கியுள்ளது.
இந்திய மதிப்பின் படி 26.95 லட்சம் மதிப்புள்ள இந்த வாகனம் ப்ரீமியம் ரக மாடலாக களமிறங்கியுள்ளது. இந்த ப்ரீமியம் எஸ்யுவி மாடலை வைத்திருப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என அறிந்தே அதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்குள் போலோ விளையாட்டு நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
இந்த மாடல் தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் ரெக்ஸ்டன் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ரெக்ஸ்டன் எஸ்யூவியின் ரீபேட்ஜ் தான் அல்டுராஸ் எஸ்யுவி ஜி4! ஆதலால் இதனை சாதாரண மஹிந்திரா கார் என நினைக்கவும் முடியாது.
இந்த ரக கார்களில் மஹிந்திரா அல்டுராஸ் எஸ்யுவி ஜி4 தான் நீள, அகலத்தில் பெரியது. அது உள்ளே இருக்கும் இடவசதியில் தெரிகிறது. மேலும் இந்த மாடலை டெஸ்ட் டிரைவ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு பிடித்துவிடும் என நிறுவனம் நம்புகிறது. ஆதலால் தகுதிவாய்ந்த நபர்களுக்கு டெஸ்ட் டிரைவ் வாய்ப்பை வழங்குகிறது.
DINASUVADU
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…