கடந்த மாதத்தை விட இந்த மாதம் காய்கறிகளின் விலை பாதிக்குமேல் சரிந்து காணபடுகிறது. இதற்க்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் லாரிகளும் அதிகமாக வர ஆரம்பித்து விட்டன.
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கடந்த மாதம் கிலோ ரூ.120 ஆக உயர்ந்து இருந்த சின்ன வெங்காயம் தற்போது 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய் வரை விற்க்கபடுகிறது. கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவை ரூ.15 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் தக்காளி ரூ.8 ஆகவும் விற்பனையாகிறது.
source : dinasuvadu.com
பேருந்து கட்டணத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலிஸ் தடியடி
பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிகமாக உயர்த்தி சில பைசாமட்டும் பல போராட்டங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி வேலூர் மாவட்டம் ஓட்டேரி சாலையில் முத்துரங்கம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.
source : dinasuvadu.com
மத்திய அரசை கண்டித்து முதல்வர் மாட்டுவண்டியில் சென்று ஆர்பாட்டம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் சிறு சிறு பைசாவாக ஏறிகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறும் அபாயம் உருவாகி வருகிறது. இதனை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி வருகிறார்.
புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாட்டுவண்டியில் சென்று போராடினர். தலைமை தபால் நிலையம் அருகே அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாவு உயர்வை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
source : dinasuvadu.com
ராணுவ ஆடை தயாரிக்கும் ஆலையை மூட மத்திய அரசு முடிவு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ராணுவத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 56 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,200 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் சுமார் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : Rs-2,886/-
1 பவுண் : Rs-23,088/-
காரட் தூய தங்கம் 1 கிராம் : Rs-3,039/-
1 பவுண் : Rs-24,312/-
இன்றைய வெள்ளி விலை நிலவரம் :
1 கிராம் சில்லறை வெள்ளி : Rs-42.20/-
பார்வெள்ளி 1 கிலோ : Rs-42,200/-
source : dinasuvadu.com
காலா படத்திருக்கு தடையா ? உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து இரண்டு பெரிய படங்கள் முடித்து வைத்துள்ளார். அதில் ஒன்று கபாலி பட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம்.
இதில் மும்பையில் வாழும் தாதாவாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இதனால் நடிகர் ரஜினி க்கு நீதிமன்றத்தில் இருந்து நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் தலைப்பை பயன்படுத்தக்கூடாது எனவும் வழக்கில் கோரப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com
அடுத்த ஜிமிக்கி கம்மலுக்கு ஆடதயாராகும் ஜெய்
நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் வந்து ஒராளவிற்கு ஓடிய படம் பலூன் விமர்சக ரீதியிலும், வசூலிலும் தயாரிப்பாளர் சொல்லிகொள்ளும் வெற்றியை தந்தது.
இவர் நடிப்பில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி, சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு பார்ட் 2 வெளியாக உள்ளது. அடுத்ததாக மாங்கல்யம் தந்துனானே எனும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் ஆகியோர் இயக்குள்ளனர்.
இப்படத்தில் ஷான் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார். இவர் சமீபத்தில் மிகவும் வைரலாக பரவிய ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இசையமைத்திருந்தார்.
source : dinasuvadu.com
20 வங்கிகளுக்கு 88 ஆயிரம் கோடி நிதியுதவி : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகவல்

பொதுத்துறை வங்கிகள் ஏராளமான வாராக்கடனில் சிக்கித் தவிக்கிறது. இதை மீட்கும் வகையில் இந்த முதலீடு நிதி அளிக்கப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் மார்ச் 31-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கிக்கு ரூ.8,800 கோடியும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.9 ஆயிரத்து 232 கோடியும் வழங்கப்படும்.
யுசிஓ வங்கிக்கு ரூ.6,570 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.5,473 கோடி, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ.5,375 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.5,158 கோடியும், கனரா வங்கிக்ககு ரூ.4,865 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.4,694 கோடியும் என பிரித்து அளிக்கப்பட உள்ளது.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.4,534 கோடியும், ஓரியன்டல் ஆப் காமர்ஸ் வங்கி ரூ.3,571 கோடியும் , தீனா வங்கி ரூ.3,045 கோடியும், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா ரூ.3,173 கோடியும் வழங்கப்பட உள்ளது.
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ2,634 கோடி, கார்பபரேஷன் வங்கி ரூ.2,187 கோடி, சின்டிகேட் வங்கிக்கு ரூ.2,839 கோடி, ஆந்திரா வங்கிக்கு ரூ.1,890 கோடி, அலகாபாத் வங்கிக்கு ரூ.1500 கோடியும், பஞ்சாப் அன்ட் சிந்து வங்கிக்கு ரூ.785 கோடியும் நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
source : dinasuvadu.com
என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் !பிரபல நடிகை ஓபன் டாக் ..
சமீப காலமாக பல நடிகைகள் ஓபனாகவே திரைத்துறையில் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக பேசுகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் ஒரு நடிகை பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுதிள்ளர் . இதில் குறிப்பாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் தொந்தரவு குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
தற்போது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், ‘என்னை தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால், நான் மறுத்துவிட்டேன்.
இதற்கு முன்பு இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன், ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்’ என்று பல பேர் இருக்கும் மேடையில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
உலகநாயகன் படத்தில் சியான் விக்ரம் : ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்கு பதிலாய் தனது வளர்ந்து நிற்கிறார் நடிகர் விக்ரம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது.
தற்போது இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. அதில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் .எம். செல்வா இயாகுகிறார். இவர் ஏற்கனவே கமல் நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது. இதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
source : dinasuvadu.com