என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருடன் ம.நீ.ம நிர்வாகிகள் சந்திப்பு…!

ரங்கசாமி மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். தமிழகத்தில் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. இந்நிலையில், என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசியுள்ளனர். ரங்கசாமி மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், மக்கள் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பஞ்சாப் முதல்வர்…!

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மொகாலியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்புமருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதனையடுத்து, தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், பிரதமர் மோடி உட்பட பல அரசியல் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் … Read more

ஒவைசி கட்சிக்கு பட்டம் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓவைசி கட்சி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் ஓவைசி கட்சிக்கு பட்டம் சின்னம் ஒதுக்கபடுவதாகவும், இந்த சின்னத்தை அக்கட்சி மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் … Read more

Google pay, Phonepe – கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்…!

தொழில்நுட்ப வசதியுடன் Google pay, Phonepe மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை தடுக்க குழு அமைத்துள்ள தேர்தல் ஆணையம்.  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்குவதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் எவ்வளவுதான் விதிமுறைகளை … Read more

தங்கம் வாங்க சரியான தருணம்…! தொடர்ந்து சரியும் தங்கம் விலை…! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனையாகிறது. சமீப நாட்காளாக தங்கம் விலை சரிவை நோக்கி செல்கிறது. இதனால், இல்லதரசிக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசு உயர்ந்து கிராம் ரூ.69.80-க்கும், ஒரு கிலோ … Read more

உதயநிதியின் அரசியல் பயணம் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், தன்னை போன்று, தனது மகனும் களத்தில் கடுமையாக பணியாற்றுவதாகவும், இருந்தாலும், உதயநிதியின் … Read more

என் தம்பியை எங்கு கொண்டு வைப்பீர்கள்..! என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வரவேண்டியிருக்கும்…! – கமலஹாசன்

ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமலஹாசன், ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி, அதிமுக, திமுக மற்றும் பாஜக காட்சிகளை விமர்சித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், … Read more

ஆவின் பாலில் மிதந்த தவளை…! விசாரணை மேற்கொண்ட அதிகாரி…!

சிவநேசன் என்பவர் வாங்கிய தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் கிடந்த தவளை. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்த சிவநேசன் என்பவர், நேற்று மாலை பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் ஆவின் பாலத்திற்கு சென்று பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது . இதனையடுத்து, சிவனேசன் ஆவின் பால் முகவர் … Read more

இன்று பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. பாமக தேர்தல் அறிக்கையை, சென்னையில் ராமதாஸ், அன்புமணி, ஜி.மணி ஆகியோர் வெளியிடுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான்…!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  எடுத்துக் கொண்டார்.  இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  எடுத்துக் கொண்டார்.