#Justnow:இரண்டு நாள் வெளிநாடு பயணம்…புறப்படுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்,ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 23) மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் டோக்கியோ செல்கிறார்.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை (மே 23 ஆம் தேதி) ஜப்பானின் … Read more

#Justnow:கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் – நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் விவசாயம்,நீர்வளம்,கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் நாளை முதல்வர் வழங்குகிறார்.அந்த … Read more

குட்நியூஸ்…இனி இவர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு;ஊதிய உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு … Read more

மாணவர்கள் கவனத்திற்கு…கல்லூரிகளில் இவை கட்டாயம் – AICTE அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தும்,அதிகரித்தும் காணப்படுகிறது.இதனால், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல்  போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில்,கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு(AICTE) பிறப்பித்துள்ளது. மேலும்,கல்லூரிக்கு வருகை புரியும் மாணவர்கள்,ஊழியர்கள் என  அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனி மனித … Read more

#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் … Read more

#Breaking:மக்களே உஷார்…மீண்டும் அதிகரித்த கொரோனா மரணம்;ஒரே நாளில் இத்தனை பேரா?..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,323 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,226 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,36,371 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 25 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 65 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,இதுவரை … Read more

பிரதமர் மோடியின் தனிச் செயலாளர்…இனி இவர்தான்!

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2004 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை (IFS) அதிகாரியான விவேக் குமார் பிரதமர் அலுவலகத்தின் (PM0) இயக்குநராக இருந்து வரும் நிலையில்,அவரை பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில்,பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக (பிஎஸ்) ஐஎஃப்எஸ் விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், பிரதமர் … Read more

“இது கொள்ளையடிப்பதற்கு சமம்” – காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும்,இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும்,அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். அந்த வகையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24-க்கும் விற்பனை … Read more

#Alert:தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை;50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக,வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “இன்று முதல் மே 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுக்கவரை: அடுத்த 48 … Read more

மக்களே…நாளை முதல் இவை கட்டாயம்;மீறினால் கடும் நடவடிக்கை- போக்குவரத்துக் காவல்துறை எச்சரிக்கை!

நாளை முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு. நடப்பு ஆண்டில் ஜனவரி 1 முதல் கடந்த 15-ம் தேதி வரையில் இருசக்கர வாகனத்தில் சென்று ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று கணக்கு எடுக்கப்பட்டதில்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் 98 பேர் உயிரிழந்திருப்பதும்,841 பேர் காயம் அடைந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் … Read more