Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆர்வத்துடன் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 51.41% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. […]
Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர். இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் பிற்பகல் 3 மணி […]
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் 39, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை […]
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக […]
Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. நீண்ட காலமாக ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவுக்கும் இஸ்ரேலுக்கு தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இம்மாதம் தொடக்கத்தில் ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த […]
Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்தவகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க […]
Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், […]
Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குசாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமை ஆற்றி […]
MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் […]
Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount […]
BOI Recruitment 2024: பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள 143 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரெகுலர் மற்றும் காண்ட்ராக்ட் அடிப்படையிலான அதிகாரிகள் பணிகள் நிரப்பட உள்ளது. எனவே ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் 10ம் […]
Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். […]
ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக சென்னை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டெவோன் […]
Election2024: கேரளாவில் மாதிரி வாக்குபதிவின்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டுகள் விழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் உள்ள 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் மக்களவை தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் […]
Rohit Sharma: எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சமயத்தில் எம்எஸ் தோனி அமெரிக்கா வருவார் என ரோஹித் பிக் அப்டேட்டை கொடுத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆடம் கில்கிறிஸ்ட் […]
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளை கடந்து விளையாடி வருகிறது. இதில் குறிப்பாக ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் அடிப்படையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி வீரர்கள் […]
Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம். நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நாளை முதல் கட்டமாக தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றது. இதனால் பிரச்சாரம் […]
Election2024: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்படுவதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் குற்றச்சாட்டு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா […]
Rahul Gandhi: இந்த தேர்தலில் பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரமும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில் வரும் தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு […]
Economic Sanctions: ஈரான் மீது அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் பொருளாதார தடை விதிப்பதாக அறிவிப்பு. கடந்த சில நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வருகிறது. இம்மாதம் தொடக்கத்தில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு கோபத்தை உண்டாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என எச்சரிக்கை […]