ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம்!

hardik pandiya

ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாக … Read more

ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Israel attack

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. நீண்ட காலமாக ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவுக்கும் இஸ்ரேலுக்கு தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இம்மாதம் தொடக்கத்தில் ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த … Read more

சேலத்தில் வாக்களிக்க சென்ற 2 பேர் உயிரிழப்பு ..!

voter died

Election2024: மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சேலத்தில் வாக்களிக்க சென்ற இருவர் உயிரிழந்ததாக தகவல். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த சூழலில் தேர்தல் ஆணையமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. அந்தவகையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க … Read more

வாக்காளர்கள் கவனத்திற்கு! இதற்கு அனுமதி கிடையாது… தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

tn election commission

Election2024: மக்களவை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. இன்று நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த சூழலில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், … Read more

உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா இன்று – இபிஎஸ்

Edappadi Palaniswami

Edappadi Palaniswami: இன்று உலகின் மிகப்பெரிய மக்களாட்சி திருவிழா என்று வாக்களித்த பின் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. அதன்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களது வாக்குசாவடிகளுக்கு சென்று ஜனநாயக கடமை ஆற்றி … Read more

இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்.. ஜனநாயக கடமையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

MK STALIN

MK Stalin: இந்தியாவுக்கு தான் வெற்றி என்று ஜனநாயக கடமையை ஆற்றிய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்தார். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதன்படி, தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் … Read more

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Ruang volcano

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3 நாட்களில் 5 முறை வெடித்து சிதறியதாக அந்நாட்டின் பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலவெசி தீவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுலவெசி தீவில் உள்ள மவுண்ட் ருவாங் எரிமலை (Mount … Read more

உடனே முந்துங்கள்… பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்திருந்தால் போதும்!

bank of india

BOI Recruitment 2024: பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள 143 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ரெகுலர் மற்றும் காண்ட்ராக்ட் அடிப்படையிலான அதிகாரிகள் பணிகள் நிரப்பட உள்ளது. எனவே ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் 27ம் தேதி முதல் பெறப்பட்டு வரும் நிலையில், அடுத்த மாதம் 10ம் … Read more

காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

election commission

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதியில் வரும் 22ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் காசர்கோடு மக்களவை தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது நான்கு மின்னணு இயந்திரத்தில் தவறு இருப்பதாகவும், அந்த இயந்திரங்களில் உள்ள தாமரை சின்னம் பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஒட்டு விழுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டினர். … Read more

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!

Devon Conway

ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் குறிப்பாக சென்னை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சூழலில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்த டெவோன் … Read more