ஆஸ்திரேலியா 134 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா..!

ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 177 ரன் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 10வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, தென் ஆப்பிரிக்கா அணியில் குயின்டன் டி காக், தேம்பா பாவுமா தொடக்க வீரர்களாக  களமிறங்கினர்.

இதில் குயின்டன் டி காக் நிதானமாகவும், வும் விளையாடினார். மறுபுறம் தேம்பா பாவுமா குயின்டனுடன் இணைந்து விளையாடி வந்த நிலையில் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பிறகு ரஸ்ஸி வான் டெர் டுசென் களமிறங்க  வந்த வேகத்தில் ரஸ்ஸி வான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் 109 ரன்களில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடித்து  பெவிலியன் திரும்பினார்.  வெளியேறினார்.

இதனையடுத்து, ஹென்ரிச் கிளாசென் மற்றும் மார்க்ராம் இணைந்து விளையாட மார்க்ராம்  அரைசதம் அடித்து 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிறகு ஹென்ரிச் கிளாசென் 29 ரன்களிலும், மார்கோ ஜான்சன் 26 ரன்களிலும் விக்கெட்டை இழக்க இறுதியில், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 311 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில்  மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் , மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே மிட்செல் மார்ஷ் 7 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து ஸ்மித் களமிறங்க அடுத்த ஓவரிலே வார்னர் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். மத்தியில் இறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 5 , மார்கஸ் ஸ்டோனிஸ் 5 ,  மேக்ஸ்வெல் 3 ரன்கள் என சொற்ப ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியில் மார்னஸ் லாபுசாக்னே மட்டும் நிதானமாக விளையாடிய  74 பந்தில் 46 ரன்கள் எடுத்தார்.  கடைசியில் இறங்கிய வீரர்களும் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்ப இறுதியாக ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 177 ரன் எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா அணியில் ரபாடா 3 விக்கெட்டையும், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.  ஆஸ்திரேலியா அணி விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியடைந்து 9-வது இடத்தில் உள்ளது.

author avatar
murugan