ஆகஸ்ட் 5 – நடைபெற இருந்த மருத்துவ கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு!

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெறுவதாக இருந்த மருத்துவ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா செஷன் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகதின் கீழ் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் MBBS , பல் மருத்துவம் மற்றும் B.pharm ஆகிய துறைகளுக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அன்றைய தினம் வேலூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்வு தேதியானது மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.