பட்டைய கிளப்பும் ஆடு ஜீவிதம்.! 5 நாளில் இத்தனை கோடியா? மிரண்டு போன மலையாள திரையுலகம்!

Aadujeevitham box office: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் ப்ளெஸ்ஸி இயக்கிய இப்படத்தில் பிருத்விராஜ் தவிர, நடிகர்கள் ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், தலிப் அல் பலுஷி, அமலா பால் மற்றும் ஷோபா மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 28-ம் தேதி உலக முழுவதும் வெளியான இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

Aadujeevitham Box Office
Aadujeevitham Box Office File Image
வெளியான ஐந்து நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான முதல் நாளில் இந்தியாவில் ரூ.7 கோடி வசூல் செய்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 31ம் தேதி வெளியான மூன்று நாட்களில் ரூ.50 கோடியை கடததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்பொழுது, உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. மலையாள சினிமாவில் உலக முழுவதும் குறுகிய நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் மலையாள திரையுலகின் ரூ.100 கோடி கிளப்பில் இப்படம் இணைந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

Aadujeevitham box office
Aadujeevitham box office File Image
எழுத்தாளர் பென்யாமினின் நாவலான ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் ஒதுக்குப்புறமான ஆட்டு பண்ணையில் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்ட மலையாளி புலம்பெயர்ந்த தொழிலாளியாக நஜீப் என்ற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளார்.

படத்தை விஷுவல் ரொமான்ஸ் இமேஜ் மேக்கர்ஸ், ஜெட் மீடியா புரொடக்‌ஷன் மற்றும் அல்டா குளோபல் மீடியா இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.