டபள் சாப்பாடு என கதறுவோர் கவனத்திற்கு..! – ஜோதிமணி எம்.பி

By

jothimani

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்று விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டபள் சாப்பாடு என கதறுவோர் கவனத்திற்கு. பெருந்தலைவர் காமராஜரின் மதிய உணவு திட்டத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் காலை சிற்றுண்டி திட்டம் வரலாற்றில் இடம்பெறும்!’ என பதிவிட்டுள்ளார்.