மாணவர்கள் கவனத்திற்கு..! 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு தேதி அறிவிப்பு..!

மாணவர்கள் கவனத்திற்கு..! 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு தேதி அறிவிப்பு..!

12th exam

10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு தேதி அறிவிப்பு. 

10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கான துணை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணைத்தேர்வு 27.06.2023 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாகவும் 23.05.2023 (செவ்வாய்க் கிழமை) பிற்பகல் 12.00 மணி முதல் 27.05.2023 (சனிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நாட்களில் விண்ணப்பிக்கத்தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30.05 2023 (செவ்வாய்க் கிழமை) மற்றும் 31.05.2023 (புதன் கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

supplemetary
supplemetary [Imagesource : Twitter/@ramkrishna]
Join our channel google news Youtube